Connect with us

எனக்கு ஒரே ஒரு சான்ஸ் கொடுங்க சார்!.. வில்லன் நடிகரின் வாழ்க்கையை உயர்த்திவிட்ட பாக்கியராஜ்!..

Cinema History

எனக்கு ஒரே ஒரு சான்ஸ் கொடுங்க சார்!.. வில்லன் நடிகரின் வாழ்க்கையை உயர்த்திவிட்ட பாக்கியராஜ்!..

Social Media Bar

தமிழ் சினிமா நடிகர்களில் குடும்பங்கள் கொண்டாடும் நாயகர்களில் முக்கியமானவராக இருந்தவர் நடிகர் பாக்கியராஜ். உதவி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமான பாக்கியராஜ், அதனை தொடர்ந்து இயக்குனரானார்.

இயக்குனரானதுமே தொடர்ந்து அவர் சினிமாவில் கதாநாயகனாகவும் அறிமுகமானார். பாக்கியராஜ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானதும் பலருக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்தார். நடிகர் பாண்டியராஜ் மற்றும் பார்த்திபன் போன்றோருக்கு இவரே வாய்ப்பளித்தார்.

அந்த வகையில் பிரபல வில்லன் நடிகரான செந்தாமரை சினிமாவில் முன்னேறுவதற்கு பாக்கியராஜ் உதவி செய்துள்ளார். செந்தாமரை சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாகதான் நடித்து வந்தார். அந்த சமயத்தில் பாக்கியராஜ்ஜிடம் வந்த அவர், சார் நான் நல்லா நடிப்பேன் சார், எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க” என கேட்டுள்ளார்.

அப்போதுதான் பாக்கியராஜ் தனது முதல் படமான சுவரில்லா சித்திரங்கள் திரைப்படத்தை இயக்கி வந்தார். எனவே அதில் செந்தாமரைக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை கொடுத்தார். செந்தாமரையும் அந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தார்.

அதற்கு பிறகு அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அதற்கெல்லாம் காரணமாக இருந்தது நடிகர் பாக்கியராஜ்தான்…

To Top