என்ன மச்சான் சொல்றான் அவன்!.. இயக்குனர் பேச்சை கேட்டு கடுப்பான பரத்!..

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு நடிகராக இருந்தவர் நடிகர் பரத். ஆரம்பத்தில் பரத் நடிக்கும் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வந்தது. தமிழில் பாய்ஸ் திரைப்படம் மூலமாக அறிமுகமானார் பரத். பாய்ஸ் திரைப்படத்தில் அவருக்கு கதாநாயகன் கதாபாத்திரம் கிடைக்கவில்லை.

ஆனால் அதற்கு பிறகு அவர் நடித்த 4 ஸ்டுடண்ட்ஸ் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து தமிழில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற துவங்கினார் பரத். எந்த அளவிற்கு சினிமாவில் சீக்கிரமாக உயரத்தை தொட்டாரோ அதே வேகத்திற்கு அவர் மார்க்கெட் குறைந்துவிட்டது.

Social Media Bar

பரத்தின் சினிமா வளர்ச்சியில் இயக்குனர் விஷ்ணு வர்தனுக்கு முக்கியமான பங்குண்டு. ஆரம்பக்கட்டத்தில் பரத்தை வைத்து  பட்டியல் என்கிற வெற்றி படத்தை கொடுத்தவர் விஷ்ணு வர்தன். இந்த நிலையில் விஷ்ணு வர்தன் படம் இயக்கும்போது நடந்த சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்திருந்தார்.

விஷ்ணு வர்தனை பொறுத்தவரை அவர் வேகமாக பேசக்கூடியவர். இதனால் அவர் என்ன பேசுகிறார் என்பதே பல சமயங்களில் படப்பிடிப்பில் உள்ளவர்களுக்கு தெரியாது. இப்படிதான் ஒருமுறை நடிகர் பரத்திடம் போய் வேக வேகமாக பேசியுள்ளார் விஷ்ணு வர்தன்.

அதனை கேட்டு கடுப்பான பரத் பக்கத்தில் நடித்து கொண்டிருந்த நடிகரை அழைத்து என்ன மச்சான் பேசுறான் அவன் ஒன்னுமே புரியலை. என கூறியுள்ளார். இந்த நிகழ்வை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் பரத்.