News
இவ்ளோ வருஷம் சினிமால இருக்கீங்களே.. வெக்கமா இல்லையா!. ராதிகாவிற்கு டோஸ் விட்ட தனுஷ்.. நயன்தாராவால் வந்த பிரச்சனை..
தமிழ் சினிமாவில் பல நடிகை, நடிகர்கள் ஒரு காலகட்டத்திற்கு பிறகு முன்னணி கதாநாயகன் மற்றும் நடிகைகளாக நடிப்பதை நிறுத்தி விடுவார்கள். காரணம் அவர்கள் திருமணத்திற்கு பிறகு இடைவெளி எடுத்துக் கொண்டு அதன் பிறகு நடிக்க வருவதும், ஒரு சில நடிகைகள் மார்க்கெட் இழந்து அதன் பிறகு அவர்கள் அம்மா கதாபாத்திரம், அக்கா கதாபாத்திரம் போன்ற குணச்சித்திர வேடங்களில் நடித்து வருவார்கள்.
இந்நிலையில் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ராதிகா. இவர் தற்பொழுது தமிழ் சினிமாவில் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த வருகிறார். அதிலும் குறிப்பாக நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனுஷ் தன்னை திட்டியது பற்றி சமூக வலைத்தளங்களில்பகிர்ந்துள்ளார். அது தற்பொழுது வைரலாகி வருகிறது.
நடிகை ராதிகா
ராதிகா பிரபல நடிகை, தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் ராடன் மீடியா என்னும் நிறுவனத்தின் மூலம் பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து வருகிறார்.

நடிகை ராதிகா கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். இதற்கு முன்பாக ராதிகாவிற்கு இரண்டு திருமணங்கள் நடைபெற்று விவாகரத்தான நிலையில் அதன் பிறகு சரத்குமாரை திருமணம் செய்து, தற்பொழுது பல படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இவர் 80ஸ் மற்றும் 90ஸ்களின் முடிவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், மோகன் உள்ளிட்டோருக்கு முன்னணி கதாநாயகியாக நடித்தார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் நடித்து பிரபலமானார்.
தன்னுடைய ராடன் மீடியா மூலம் சித்தி, அண்ணாமலை, செல்வி, வாணி ராணி போன்ற மெகா ஹிட் சீரியல்களை வழங்கினார். இந்நிலையில் தான் நடிகர் தனுஷ் ராதிகாவை திட்டியுள்ள சம்பவம் குறித்து அவர் பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.
நடிகை ராதிகாவை திட்டிய நடிகர் தனுஷ்
ஒரு முறை படத்தின் சூட்டிங் முடிந்து சென்னை வந்திருந்த ராதிகாவிற்கு நடிகர் தனுஷ் போன் செய்து, சூட்டிங் முடிந்து விட்டதா என கேட்டுள்ளார். முடிந்து விட்டது என ராதிகாவும் கூறி இருக்கிறார். தனுஷ் உடனே, உங்களுக்கு தெரியுமா நயன்தாராவும் விக்னேஷும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்களாம் என கூறியிருக்கிறார்.
ஆனால் இதனை நம்பாத ராதிகா நான் ஷூட்டிங்கில் இருந்து தான் வருகிறேன். எனக்கு ஒன்றும் அவ்வாறாக தெரியவில்லையே. நீ பொய் சொல்கிறாயா என கேட்டுள்ளார். உடனே தனுஷ் உங்களுக்கு வெட்கமாக இல்லையா, இத்தனை வருடங்கள் சினிமாவில் இருக்கிறீர்கள் இதைக் கூட உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலிக்கிறார்கள். இருவரும் விரைவில் திருமணம் செய்யப் போகிறார்கள் என தனுஷ் கூறியிருக்கிறார்.
தனுஷ் இவ்வாறு என்னை கலாய்த்தது என்னால் மறக்கவே முடியாது. மேலும் நானும் ஷூட்டிங்கில் தானே இருந்தேன். எப்படி எனக்கு தெரியாமல் போனது என நான் பலமுறை நயன்தாராவை கலாய்த்துருக்கிறேன் என்று ராதிகா நகைச்சுவையாக கூறினார்.
நயன்தாரா, ராதிகா, விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடிதான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
