News
ரஜினியா நடிக்கவும் ஆசை இருக்கு!.. நிறைவேறுமான்னு தெரியல!.. ஓப்பனாக போட்டு உடைத்த தனுஷ்!..
Dhanush: தமிழில் வித்தியாசமான திரைப்படங்களாக நடித்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக தனுஷ் இருந்து வருகிறார். விஜய் அஜித் மாதிரியான நடிகர்கள் தொடர்ந்து ஆக்ஷன் பிளாக் திரைப்படங்களாக நடித்த வந்து கொண்டிருக்கும் நிலையில் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் நடிகர்கள் வெகு சிலரே தமிழ் சினிமாவில் இருக்கின்றனர்.
அப்படியான நடிகர்களில் தனுஷும் முக்கியமானவர். இந்த நிலையில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க ஆசைப்பட்டிருக்கிறார் இந்த படத்தை இளையராஜாவும் இன்னொரு கம்பெனியும் சேர்ந்து தயாரிப்பதாக கூறப்படுகிறது.

தன்னுடைய வாழ்நாள் கனவாக இதை தனுஷ் கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்காக ஒரு பேட்டி நடத்தப்பட்டது. அதில் தனுஷ் பேசும் பொழுது தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்த பொழுது எனக்கு இரண்டு பெரும் கனவுகள் இருந்தன.
இளையராஜா திரைப்படம்:
அதில் ஒன்று இளையராஜாவாக அவரது வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வேண்டும் என்பது. மற்றொன்று ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்றில் ரஜினிகாந்த்தாக நடிக்க வேண்டும் என்பதாகும். அதில் ஒரு ஆசை இப்பொழுது நிறைவேற துவங்கியிருக்கிறது என்று கூறவேண்டும்.

இளையராஜாவாக நடிப்பது மிகவும் கஷ்டம் என்று பலரும் கூறுகின்றனர் ஆனால் ஒவ்வொரு முறை நான் நடிக்க வரும் பொழுதும் அந்த காட்சிக்கு தகுந்த உணர்ச்சிகளை கொண்டு வருவதற்கு இளையராஜா பாடலை கேட்டு விட்டுதான் வருவேன். எனும்பொழுது அந்த பாடலே எனக்கு இளையராஜாவாக எப்படி நடிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கும் என்று நான் நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார் தனுஷ்.
