தன்னுடைய ரசிகையை வாகனத்துக்கு அழைத்த ஹிப் ஹாப் ஆதி!.. அதற்கு பிறகு நடந்ததுதான் ட்விட்ஸ்!.

தமிழில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் ஹிப் ஹாப் ஆதி இருந்து வருகிறார். ஹிப் ஹாப் ஆதி தமிழ் பாடல்களை பாடி அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வந்தார். அதன் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கினார்.

இதற்கு நடுவே இயக்குனர் சுந்தர் சி மூலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதற்கு பிறகு நிறைய திரைப்படங்களில் நன்றாகவே இசையமைத்து வந்தார். இதற்கு நடுவே அவருக்கு கதாநாயகனாக நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.

Social Media Bar

பி.டி சார் திரைப்படம்:

தற்சமயம் பி.டி சார் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார் ஹிப் ஹாப் ஆதி. இந்த படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தனது ரசிகர்களை சந்தித்து வந்தார் ஹிப் ஹாப் ஆதி. கோவையில் இவர் கல்லூரி ஒன்றில் ரசிகர்களை சந்திக்க வந்தப்போது அங்கிருந்த மாணவி ஒருவர் நானும் ஆதி அண்ணா மாதிரி ஆக வேண்டும் என கூறி அழுதுள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த கல்லூரி மாணவியை தேடிப்பிடித்து தனது வாகனத்திலேயே அவரை அழைத்து சென்றுள்ளார் ஹிப் ஹாப் ஆதி. மேலும் அவரிடம் என்ன பாட்டு பாடினாலும் உன்னை திட்டுறவங்க இருக்கதான் செய்வாங்க.

அவங்களை கண்டுக்காத உன்னை பாராட்டுறவங்களுக்காக நீ ஓடு என புத்திமதி கூறியுள்ளார்.