Tamil Cinema News
16 அடுக்கு பில்டிங் பயந்து ஓடுன கதை.. ஜீவ பண்ணுன சம்பவம்தான் காரணம்..!
கிரிக்கெட் தொடர்பான திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் எப்பொழுதுமே அதிக வரவேற்பு உண்டு. அப்படியாக 1983இல் இந்தியா உலக கோப்பையை வென்ற கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் 83 இந்த திரைப்படத்தில் ரன்வீர் சிங் கபில்தேவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சீக்கா கதாபாத்திரத்தில் ஜீவா நடித்திருந்தார்.
அப்பொழுது நடந்த ஒரு சம்பவத்தை ஜீவா தனது பேட்டிகயில் பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது படத்தில் ஒரு சில காட்சிகள் ஸ்காட்லாந்தில் படம் பிடிக்கப்பட்டது. அப்பொழுது நாங்கள் தங்கி இருந்த ஹோட்டலில் புகை பிடிக்கக் கூடாது என்பது விதிமுறையாக இருந்தது.
ஜீவா செய்த வேலை:
ஆனால் அது எனக்கு தெரியவில்லை சீக்கா கதாபாத்திரம் என்பதால் மறுநாள் புகை பிடிப்பது போன்ற காட்சிகள் எனக்கு இருந்தது. அதற்காக சும்மா புகைபிடித்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தோம். உடனே ஒரு அபாய ஒலி ஒலித்தது.
எங்களது அறைக்கு போன் வந்தது அதில் பேசியவர் உங்கள் அறையில் யாராவது சிகரெட் பிடிக்கிறார்களா? என்று கேட்டனர் நாங்கள் இல்லை என்று வைத்துவிட்டோம். பிறகு அபாய சங்கும் நின்றுவிட்டது. அதான் அபாய சங்கு நின்று விட்டதே என்று மீண்டும் புகை பிடித்தோம்.
இப்பொழுது எல்லா அறைகளிலுமே அபாய சங்கு ஒலித்தது. எல்லோரும் கட்டிடத்தை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று குரல் கேட்டது பிறகு கட்டிடத்தில் இருந்த அனைவருமே கீழே ஓடிக்கொண்டிருந்தனர். லிஃப்ட் வசதியும் அப்பொழுது வேலை செய்யவில்லை.
அதனால் எல்லோருமே படிக்கட்டு வழியாக இறங்கி கொண்டிருந்தனர் நாங்களும் படிக்கட்டு வழியாக கீழே இறங்கி சென்றோம். அதற்கு பிறகு தான் தெரிந்தது நான் மட்டும் சிகரெட் பிடிக்கவில்லை கட்டிடத்தில் பலபேர் அதை செய்தனர். அதற்குப் பிறகு அதற்கான தண்ட தொகையை பட குழுவில் இருந்து காட்டினார்கள் என்று அந்த விஷயத்தை பகிர்ந்திருந்தார் ஜீவா