ஆண்டியை நம்பி வாழ்க்கையை இழந்த நடிகர் கரண்.. உண்மையை கூறிய பிரபலம்..!
தமிழ் சினிமாவில் 90ஸ் காலத்தில் வில்லன் என்று கூறினாலே ஒரு சில நடிகர்களின் முகங்கள் நம் மனதில் வந்து விட்டுச் செல்லும் அந்த வகையில் இவரை ஹீரோ என்று சொல்வதா? அல்லது ஹீரோவின் தோழன் என்று கூறுவதா? அல்லது மக்கள் பார்த்து பயப்படும் வில்லன் என்று கூறுவதா? என தெரியாமல் குழம்பி இருந்த காலம் அது.
90ஸ் காலத்தில் தொடக்கத்தில் தன்னை வில்லனாக அறிமுகப்படுத்திக் கொண்டவர் தான் நடிகர் கரண். இவரை தெரியாத 90ஸ் கிட்ஸ் யாரும் இருக்க முடியாது அந்த அளவிற்கு அனைவரின் மத்தியிலும் பிரபலமாக இருந்தார்.
முக்கியமாக 90ஸ் காலத்தில் ஹீரோவாக நடித்த பிரசாந்த், அஜித் போன்ற நடிகர்களுக்கு தோழனாகவும் நடித்து தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு கரண்எந்த படத்திலும் நடிக்கவில்லை அதனைப் பற்றி காண்போம்
90’ஸ் தொடக்கத்தில் கரண்
கரண் தமிழ். மலையாள படங்களில் நடிகராக அறிமுகமாகி தனது சினிமா வாழ்க்கை பயணத்தை தொடங்கினார். அவர் மலையாள படங்களில் குழந்தை நடிகராக பல படங்களில் நடித்திருக்கிறார்.
மேலும் அவருக்கு வில்லன் கதாபாத்திரம் தான் அதிகமாக கொடுக்கப்பட்டது. ஆனால் கொடுக்கும் வாய்ப்பை தவறவிடாமல் கரண் அதனை சரியாக பயன்படுத்தி மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துக் கொண்டிருந்தார்.

இவரை வில்லனாக பார்த்த ரசிகர்கள் திடீரென்று ஹீரோவின் தோழனாகவும் பார்க்க ஆரம்பித்தார்கள். அந்த கதாபாத்திரமும் இவருக்கு பொருத்தமாக அமைந்ததால் இவரை வில்லன் தோற்றத்திலிருந்து ஹீரோவின் தோழன் என்ற நிலைக்கு ரசிகர்கள் ரசித்தார்கள்.
பிறகு அவர் தமிழில் கருப்பசாமி குத்தகைதாரர். காத்தவராயன் மற்றும் சில படங்களில் ஹீரோவாக தன்னை அறிமுகப்படுத்தினார். ஹீரோ கதாபாத்திரத்திற்கு நடிகர் கரண் தனது நடிப்பை திறமையாக வெளிப்படுத்தி இருந்தார். அதன் மூலம் தனக்கான மார்க்கெட்டை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கிக் கொண்டார்.
காணாமல் போன கரண்
இவ்வாறு மக்கள் மத்தியில் நல்ல மார்க்கெட்டை திரைத்துறையில் வைத்திருந்த கரண் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு எங்கு சென்றார் என்று யாருக்கும் தெரியவில்லை.
ஒருமுறை பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர், கரணை சந்தித்து பேசிய பொழுது கரண் கூறியதாவது நான் மிகவும் கர்வம் கொண்டவனாக இருக்க வேண்டும் என நினைத்து அவருக்கான ஒரு வரைமுறையை வைத்திருந்தாராம்.

மேலும் சினிமா காலத்தின் தொடக்க காலத்தில் எனக்கு ஒரு நாளைக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இறுதியாக 300 ரூபாய் கொடுத்து என்னை அங்கிருந்து அனுப்பிவிடுவார்களாம். இதனால் நான் பலமுறை அவமானபட்டு உள்ளேன் எனவும் கூறியிருக்கிறார்.
ஆனால் கரண் ஏதோ ஒரு பெண்ணால் தனது வாழ்க்கை இழந்தார் என்று கூறுவது நம்ப முடியாத ஒன்றாக உள்ளது. எனவும் அதே சமயம் அது உண்மையாகவும் இருக்கலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது.
தற்பொழுது அமெரிக்காவில் செட்டில் ஆகியிருக்கும் கரண், தான் சம்பாதித்து வைத்திருந்த மார்க்கெட்டை அந்த ஆன்ட்டியினால் தான் இழந்தார் என்றும் அப்போதைய காலகட்டத்தில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது.