கைதி 2 எப்போ வருது –  தகவலை லீக் செய்த கார்த்திக்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்சமயம் தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தில் இருக்கிறார். பல்வேறு நடிகர்களும், தயாரிப்பாளர்களும் லோகேஷ் கனகராஜ்ஜூடன் இணைந்து படம் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள்.

ஏனெனில் அவர் சினிமாவிற்கு வந்தது முதல் இதுவரை 4 திரைப்படங்களை இயக்கியுள்ளார். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் இந்த நான்கு திரைப்படங்களுமே தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளன.

இந்நிலையில் அவருக்கு வரிசையாக படங்கள் கமிட் ஆகி வருகின்றன. அவர் கார்த்தியை வைத்து கைதி 2 எடுத்து அதை விக்ரம் படத்துடன் இணைக்க வேண்டும். விக்ரம் 2 எடுக்க வேண்டும். இதற்கிடையே நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்க போவதாக கூறியுள்ளார்.

மேலும் கமல் தயாரிப்பில் ரஜினிகாந்தை வைத்தும் இவர் படம் இயக்க போவதாக பேச்சுகள் உள்ளன. இதற்கு இடையே எந்த படத்தை எப்போது எடுக்க போகிறார். எந்த படம் முதலில் வர போகிறது என பல்வேறு குழப்பங்களில் தமிழ் ரசிகர்கள் உள்ளனர்.

தற்சமயம் விஜயோடு அடுத்த படத்தில் வேலை செய்து வருகிறார் லோகேஷ். இந்நிலையில் கார்த்தி நடித்த விருமன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது சில நாட்களுக்கு முன்பு நடந்தது. அதில் கார்த்தி கூறும்போது அடுத்த வருடம் விஜய் படத்திற்கான இயக்க வேலைகளை லோகேஷ் முடிக்கிறார்.

அதற்கு பிறகு அவர் கைதி 2 படத்தை இயக்க உள்ளார். என கூறியுள்ளார். எனவே எப்படி பார்த்தாலும அடுத்த வருட இறுதிக்குள் கைதி 2 திரைப்படத்தை திரையரங்குகளில் எதிர்ப்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh