Connect with us

பையில் குண்டுகளுடன் விமான நிலையம் சென்ற கருணாஸ்!.. மடக்கிய விமான நிலையம்!.. விசாரனையில் வெளிவந்த உண்மை..

News

பையில் குண்டுகளுடன் விமான நிலையம் சென்ற கருணாஸ்!.. மடக்கிய விமான நிலையம்!.. விசாரனையில் வெளிவந்த உண்மை..

Social Media Bar

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே பிரபலமாக இருந்து வரும் காமெடி நடிகராக கருணாஸ் இருந்து வருகிறார். முன்பெல்லாம் அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் அதிகமாக கிடைத்தது.

அதனை தொடர்ந்து அம்பாசமுத்திரம் அம்பானி, திண்டுக்கல் சாரதி என சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். ஆனால் தொடர்ந்து கதாநாயகனாக அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

காமெடி நடிகர்:

போக போக காமெடி நடிகராக நடிக்க கூட அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இதனை தொடர்ந்து துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் கருணாஸ்.

இது மட்டுமின்றி முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார். இவர் நேற்று சென்னையில் இருந்து திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு அவரது பையை சோதனையிடும்போது அதிர்ச்சி அளிக்கும் விதமாக அதில் துப்பாக்கி குண்டுகள் இருந்துள்ளன.

விமான நிலையத்தில் பரபரப்பு:

இதனையடுத்து அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவர்களிடம் பேசிய கருணாஸ் தான் லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்திருப்பதாகவும் அதில் போட வைத்திருந்த குண்டுகள்தான் இவை என்றும் கூறினார்.

மேலும் இவை எப்படி பைக்குள் வந்தது என தெரியாது என்றும் விளக்கம் கொடுத்துள்ளார். ஆனால் அவரது விளக்கம் விமான நிலைய அதிகாரிகளுக்கு ஏற்புடையதாக இல்லாததால் கருணாஸின் பயணத்தை ரத்து செய்து அவரை வீட்டுக்கு அனுப்பியுளனர்.

இதனால் அந்த விமானமும் அரை மணி நேரம் காமதமாகதான் கிளம்பியுள்ளது.

To Top