Movie Reviews
அன்னப்பூரணி மாதிரி இருக்கா கவினின் ஸ்டார் படம் எப்படியிருக்கு? விமர்சனம்!..
நடிகர் கவின் நடிக்கும் திரைப்படங்களுக்கு எல்லாம் வரவேற்புகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. டாடா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து கவின் நடித்து வந்த திரைப்படம் ஸ்டார். இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ஏ.வி.எம் சரவணனுக்கு சிறு வயது முதலே சினிமாவின் மீது ஈடுபாடு இருந்ததாம். அப்படியாக சிறு வயது முதலே நடிப்பின் மீது ஈடுபாடு கொண்ட ஒரு கதாபாத்திரம்தான் கவினின் கதாபாத்திரம். கதையின்படி சிறு வயதிலேயே பள்ளி விழாவில் பாரதியாராக நடிக்க செல்கிறார் கவின்.

ஆனால் பாரதியாருக்கு முக்கியமான விஷயமான மீசையே அவரது வேடத்தில் இல்லாமல் இருக்கிறது. அப்போது அவருடைய அப்பா ஒரு சிறந்த நடிப்பின் மூலம் அந்த மீசை இல்லை என்பதையே மறக்கடிக்க முடியும் என கூறுகிறார். அதே போல அந்த போட்டியில் சிறப்பாக நடித்து வாழ்த்துக்களை பெறும் கவின் அப்போது முதல் ஒரு நடிகனாக வேண்டும் என முடிவெடுக்கிறார்.
பிறகு அவர் நடிகராவதற்காக படும் கஷ்டங்கள் அதற்குள் வரும் காதல், குடும்ப சூழ்நிலை இப்படி பல தடைகளை தாண்டி அவர் எப்படி ஒரு கதாநாயகன் ஆகிறார் என்பதே படத்தின் கதையாக உள்ளது. இந்த மாதிரியான கதை அம்சத்தில் நிறைய திரைப்படங்கள் வந்துள்ளன என்றாலும் கூட கவின் நடித்திருப்பதால் இந்த படம் கொஞ்சம் சிறப்பு வாய்ந்ததாக தெரிகிறது.
