Connect with us

நாம கேட்டதும் நீட்டிட மாட்டாங்க!.. சம்பள விஷயத்தில் கேட்ட கேள்விக்கு சமாளித்து பேசிய கவின்!.

kavin star

News

நாம கேட்டதும் நீட்டிட மாட்டாங்க!.. சம்பள விஷயத்தில் கேட்ட கேள்விக்கு சமாளித்து பேசிய கவின்!.

Social Media Bar

தமிழ் சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முக்கியமானவர் கவின். கவினுக்கு தமிழ் சினிமாவில் தற்சமயம் தொடர்ந்து பட வாய்ப்புகள் வர துவங்கியுள்ளன. இவரும் சிவகார்த்திகேயன் , சந்தானம் போலவே சின்ன திரை மூலமாக சினிமாவிற்கு வந்தவர்தான்.

பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் துவங்கிய சமயம் இவரும் அதில் போட்டியாளராக இருந்தார். அப்போது  இவருக்கு மக்கள் மத்தியில் கொஞ்சம் வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து எப்படியாவது தமிழ் சினிமாவில் கதாநாயகன் ஆகிவிட வேண்டும் என்பது இவரது ஆசையாக இருந்தது.

தொடர்ந்து இதற்காக முயற்சித்து வந்த கவின் லிஃப்ட் என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்றாலும் ஓரளவு வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அவர் நடித்த டாடா திரைப்படத்திற்குமே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் தற்சமயம் ஸ்டார் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் கவின். இந்த திரைப்படத்தின் ட்ரைலரே நல்ல வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் கவின் அதிகமாக சம்பளம் வாங்குவதாகவும் அதனால் பல இயக்குனர்கள் அவரை நிராகரித்து வருவதாகவும் பேச்சுக்கள் இருந்தன.

இதுக்குறித்து கவினிடம் கேட்கும்போது நாம் கேட்கிறோம் என்றெல்லாம் யாரும் தூக்கி கொடுத்து விட மாட்டார்கள். நமது மார்க்கெட்தான் சம்பளத்தை தீர்மானிக்கும். எனக்கு இந்த படத்தை முடிக்கவே ஒரு வருடம்  ஆகிவிட்டது என கூறியுள்ளார் கவின்.

To Top