Cinema History
அவனுக்கு சோறு போடாம என்ன வேலை உங்களுக்கு!.. படப்பிடிப்பை நிறுத்துங்க!.. கடுப்பான எம்.ஜி.ஆர்!.
தமிழ் சினிமா நடிகர்களில் பொன்மன செம்மல், புரட்சி தலைவர், மக்கள் திலகம் என பல பட்டங்களில் அழைக்கப்படுபவர் எம்.ஜி.ஆர். மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் எம்.ஜி.ஆர். அதன் பிறகு அரசியலுக்கு வந்தவர் தனியாக கட்சி ஆரம்பித்து தமிழ்நாட்டுக்கே முதலமைச்சர் ஆனார்.
ஆனால் சினிமாவில் அறிமுகமான காலக்கட்டத்தில் உணவுக்காக மிகவும் கஷ்டப்பட்டார் எம்.ஜி.ஆர். எனவே யாரும் தன்னை போல கஷ்டப்பட கூடாது என கருதினார். இதனாலேயே அவரது திரைப்படங்களில் ஒவ்வொரு நாளும் மதிய வேளையில் அனைத்து தொழிலாளர்களும் சாப்பிட்டார்களா என்பதை சோதித்துக்கொண்டே இருப்பார்.
இந்த நிலையில் அப்போதுதான் புதிதாக எம்.ஜி.ஆர் மேக்கப் மற்றும் காஷ்ட்யூம்க்காக முத்து என்பவரை வேலைக்கு அமர்த்தியிருந்தனர். அப்போது கேரவன் வசதியெல்லாம் கிடையாது. நான்கு புடவையை மறைப்புக்கு கட்டி தேவையான மேக்கப் பொருட்கள் மற்றும் ஆடைகளை அங்குதான் வைத்திருந்தனர்.
இந்த நிலையில் அங்கு வந்த முத்துவிடம் “நான் வெளில போறேன் வர்ற வரைக்கும் இந்த ஆடைகளை எல்லாம் பார்த்துக்கொள்கிறாயா?” என கேட்டுள்ளார் எம்.ஜி.ஆர். முத்துவும் அதற்கு சம்மதத்திருக்கிறார். காலையில் வெளியில் சென்ற எம்.ஜி.ஆர் மாலை 3 மணிக்குதான் திரும்ப அங்கு வந்தார்.
எம்.ஜி.ஆருக்கு கொடுத்த வாக்குக்காக அப்போதுவரை எங்கும் செல்லாமல் ஆடைகளை பாதுக்காத்து வந்தார் முத்து. இதனை பார்த்த எம்.ஜி.ஆர் மனமுருகி போனார். நான் சொன்னதற்காக இங்கேயே அமர்ந்துள்ளீர்களே முதலில் சாப்பிட்டீர்களா என எம்.ஜி.ஆர் கேட்க இல்லை என பதிலளித்துள்ளார் முத்து.
உடனே படக்குழுவினரை அழைத்து சத்தம் போட்ட எம்.ஜி.ஆர் அவருக்கு உடனடியாக உணவளிக்க வேண்டும். இல்லை என்றால் படப்பிடிப்பை நிறுத்திவிடுவேன் என கூறியுள்ளார். பிறகு முத்துவிற்கு உணவளித்துள்ளனர். அதன் பிறகு எம்.ஜி.ஆரின் எல்லா படங்களிலும் அவருக்கு முத்துதான் மேக்கப் மேனாக, காஸ்ட்யூம் டிசைனராக இருந்தார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்