Connect with us

எம்.ஜி.ஆரை வச்சி நீ படம் எடுத்தா அது வெளங்குமா? கேளிக்கு உள்ளான பிரபல இயக்குனர்!.. கை கொடுத்த எம்.ஜி.ஆர்!.

MGR sridhar

Cinema History

எம்.ஜி.ஆரை வச்சி நீ படம் எடுத்தா அது வெளங்குமா? கேளிக்கு உள்ளான பிரபல இயக்குனர்!.. கை கொடுத்த எம்.ஜி.ஆர்!.

Social Media Bar

MGR and Director Sridhar : தமிழில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் ஸ்ரீதர். இப்போதைய தலைமுறையினருக்கு இயக்குனர் ஸ்ரீதரை பெரிதாக தெரியாமல் இருக்கலாம். ஆனால் இதற்கு முந்தைய தலைமுறையினர் பலருக்கும் ஸ்ரீதரை தெரிந்திருக்கும்.

நடிகை ஜெயலலிதாவை தன்னுடைய வெண்ணிற ஆடை திரைப்படம் மூலமாக முதன்முதலாக அறிமுகம் செய்தவர் இயக்குனர் ஸ்ரீதர் தான். அதேபோல அப்பொழுது பெரிதாக கொண்டாடப்பட்ட காதலிக்க நேரமில்லை என்கிற திரைப்படத்தை இயக்கியவரும் ஸ்ரீதர் தான்.

sridhar
sridhar

ஸ்ரீதர் திரைப்படங்களைப் பொறுத்தவரை அது வெறும் சண்டை காட்சிகள் மட்டும் கொண்ட படமாக இருக்காது. அதனை தாண்டி காமெடி என்று பல வேறு விஷயங்களை அது திரைப்படங்களில் காட்டியிருப்பார் ஸ்ரீதர். தமிழில் உள்ள பழம் பெரும் நடிகர்களை வைத்து திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் ஸ்ரீதர்.

உதவிய எம்.ஜி.ஆர்:

இவர் சிவாஜி கணேசன் நடித்த வைர நெஞ்சம் என்கிற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்த பொழுது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்டார். அப்பொழுது தன்னுடைய தயாரிப்பில் ஒரு நல்ல வெற்றி படத்தை இயக்கினால் மட்டுமே அதில் இருந்து மீள முடியும் என்கிற நிலை இருந்தது.

இந்த நிலையில் எம்.ஜி.ஆர் தவிர வேறு யாரும் இதற்கு உதவ முடியாது என்று நம்பினார் ஸ்ரீதர். எனவே எம்.ஜி.ஆரிடம் சென்று ஒரு கதையை கூறினார் எம்.ஜி.ஆருக்கும் அந்த கதை பிடித்திருக்கவே அந்த படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டார்.

mgr
mgr

ஆனால் இந்த விஷயம் தமிழ் சினிமாவிற்குள் கசிந்த போது எம்.ஜி.ஆருக்கு ஏற்றார் போல படம் எடுக்க ஸ்ரீதர் சரிப்பட்டு வர மாட்டார் எனவே எப்படியும் ஸ்ரீதர் ஒரு படத்தை எடுத்தால் அது எம்.ஜி.ஆருக்கு நல்ல வெற்றியை கொடுக்காது என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்தன.

இவற்றையெல்லாம் காதில் வாங்கி கொண்டிருந்த ஸ்ரீதர் எம்.ஜி.ஆருக்கு ஏற்றாற் போல அந்த கதையை மாற்றியமைத்து திரைப்படத்தை எடுத்தார். இவ்வளவு பேச்சுக்களையும் தாண்டி அந்த திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்தது. உரிமை குரல் என்கிற அந்த திரைப்படம் அப்போது வெகுவாக பேசப்பட்ட திரைப்படமாக இருந்தது.

அப்போது எம்.ஜி.ஆர் கைகொடுக்காவிட்டால் திரும்ப படம் எடுத்திருப்பேனா என்றே தெரியவில்லை என்று இது குறித்து ஸ்ரீதர் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

To Top