இந்திராகாந்திக்கிட்ட பேசி எம்.பி பதவி வாங்கி தரேன்!.. நடிகைக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த வாய்ப்பு!.. இதுதான் காரணம்!..

MGR: தமிழ் சினிமா நடிகர்களில் மக்களிடம் பேராதரவை பெற்ற நடிகராக எம்.ஜி.ஆர் இருக்கிறார். சினிமாவை தாண்டி எம்.ஜி.ஆருக்கும் மக்களுக்கும் இடையே ஒரு பந்தமுண்டு. அதுதான் எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்த பிறகு அவருக்கு அதிகப்படியான தொண்டர்களை உருவாக்கி கொடுத்தது.

அப்போது சினிமா நடிகர்களுக்கு அந்த அளவிற்கான வாய்ப்புகளும் வரவேற்புகளும் இருந்தன. இந்த நிலையில் அரசியலுக்கு வந்த பிறகு மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்து வந்தார் எம்.ஜி.ஆர். தினசரி பத்திரிக்கைகளில் அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர் குறித்த செய்திகள்தான் வெளிவரும் என கூறப்படுகிறது.

mgr
mgr
Social Media Bar

இந்த நிலையில் அரசியலுக்கு வந்த பிறகும் கூட எம்.ஜி.ஆருக்கும் திரை பிரபலங்களுக்கும் இடையே இருந்த நட்பு அப்படியே நீடித்து வந்தது என கூறப்படுகிறது. இந்த நிலையில் பெற்றால்தான் பிள்ளையா என்கிற திரைப்படத்திற்கு பிறகு எம்.ஜி.ஆருக்கும் சரோஜா தேவிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சரோஜாதேவிக்கு வந்த வாய்ப்பு:

ஏனெனில் அதற்கு பிறகுதான் சரோஜா தேவிக்கு திருமணம் ஆனது. அதே சமயம் எம்.ஜி.ஆர் குண்டடி பட்டு மருத்துவமனையில் இருந்தார். திருமணம் காரணமாக சரோஜாதேவியால் எம்.ஜி.ஆரை நேரில் சென்று பார்க்க முடியவில்லை. இதனால் கோபித்துக்கொண்ட எம்.ஜி.ஆர் பிறகு சரோஜாதேவியிடம் பேசாமலே இருந்தார்.

இதற்கு நடுவே சில காலங்களுக்கு பிறகு சரோஜா தேவியின் கணவர் இறந்துவிட்டார் என்கிற செய்தி எம்.ஜி.ஆரை எட்டியுள்ளது. இதனை கேட்டு கவலையடைந்த எம்.ஜி.ஆர் உடனே சரோஜா தேவியை சந்தித்தது மட்டுமில்லாமல் இந்திராகாந்தியிடம் பேசி அவருக்கு எம்.பி பதவி வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் தனக்கு அரசியல் மீது அவ்வளவாக ஆர்வமில்லை எனவே எனக்கு எந்த பதவியும் வேண்டாம் என மறுத்துள்ளார் சரோஜா தேவி.