Tamil Cinema News
எம்.ஜி.ஆர் காலில் விழலைல.. நடிகருக்கு வந்த மிரட்டல்.. புது கதையா இருக்கே..!
எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவிலும் அரசியலும் மிக முக்கியமான நபராக இருந்தவர். அரசியல்வாதி என்பதாலேயே எம்.ஜி.ஆருக்கு திரைத்துறையில் அதிக மரியாதை இருந்தது. பெரும்பாலும் திரைத்துறையில் எம்.ஜி.ஆரிடம் பேசுபவர்கள் அவரது கண்ணை பார்த்து நேரடியாக பேச மாட்டார்கள்
அந்த அளவிற்கு அடக்கமாக இருப்பார்கள். இன்னும் சிலர் எம்.ஜி.ஆரை கடவுள் போல பார்த்தனர். இந்த நிலையில் எம்.ஜி.ஆரின் காலில் விழாத காரணத்தினால் நடந்த பிரச்சனைகள் குறித்து நடிகர் மோகன் ஷர்மா சில தகவல்களை தெரிவித்திருந்தார்.
அதில் அவர் கூறும்போது சினிமாவுக்கு வந்தப்போது எனக்கு அதிக வரவேற்பு இருந்தது. இந்த நிலையில் ஒருமுறை நான் நடித்த திரைப்படத்தின் முதல் காட்சியை துவங்கி வைப்பதற்கு எம்.ஜி.ஆர் வந்திருந்தார். அப்போது நான் எம்.ஜி.ஆருக்கு கை கொடுத்தேன்.
பெரும்பாலும் புது நடிகர்கள் எம்.ஜி.ஆரின் காலில் விழுவதுதான் வழக்கம். ஆனால் நாம் என் அம்மா அப்பாவை தவிர யார் காலிலும் விழுவது இல்லை. இந்த நிலையில் ஒரு பத்திரிக்கை எம்.ஜி.ஆர் போட்டோவை சின்னதாக போட்டு என் போட்டோவை பெரிதாக் போட்டு இளம் நடிகர்கள் வந்துவிட்டதாக எழுதியிருந்தனர்.
மறுநாள் தமிழ்நாடு முழுக்க அது அதிகமாக பேசப்பட்ட விஷயமாக இருந்தது. இந்த நிலையில் எனக்கு போன் செய்த எம்.ஜி.ஆர் ரசிகர் ஒருவர் இதற்காக என்னிடம் எச்சரிக்கை எல்லாம் கொடுத்தார் என அந்த விஷயத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் மோகன் ஷர்மா
