அந்த நடிகை 80 தடவை அறைஞ்சி கன்னம் பழுத்துடுச்சி.. மிஸ்கினுக்கு நடந்த சம்பவம்!..

ஒரு திரைப்படத்தில் மிக முக்கிய ஆளாக இருப்பது அந்த படத்தின் இயக்குனர்தான், நடிகர்கள் வரை அனைவரையும் கண்ட்ரோலில் வைத்திருக்கும் ஒரு ஆளாக இயக்குனர் இருக்கிறார்.

ஆனால் அதே இயக்குனர் வேறு திரைப்படத்தில் நடிகராக நடிக்க செல்லும் பொழுது நடிப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை அவரால் உணர முடியும். கெளதம் மேனன் கூட ஒரு பேட்டியில் திரைப்படத்தை இயக்குவதை விட அதில் நடிப்பது தான் மிகவும் கடினமான காரியம் எனக் கூறியுள்ளார்.

இப்படியான ஒரு சம்பவம் நடிகர் மிஷ்கினுக்கும் நடந்தது 2019 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் மிஷ்கின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்கினார். முதலில் மிஷ்கினுக்கு மனைவியாக அதில் நடித்தவர் நடிகை நதியா.

அதில் ஒரு காட்சியில் நதியா மிஸ்கினை அறைவது போன்று காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அறைவது போல செய்வது பார்க்க இயல்பாக இல்லை என்று நினைத்த மிஷ்கின் நிஜமாகவே என்னை அறைந்து விடுங்கள் மேடம், ஒன்றும் பிரச்சனை இல்லை என்று நதியாவிடம் கூறினார்.

ஆனால் அந்த காட்சி மட்டும் அன்று 80 முறை திரும்பத் திரும்ப எடுக்கப்பட்டது. இதனால் 80 முறை அறை வாங்கினார் மிஷ்கின். அதற்கு பிறகு சில காரணங்களால் நதியா அந்த திரைப்படத்தை விட்டு விலகி விட்டார். அதன் பிறகு படத்தில் திரும்பவும் மிஷ்கினின் மனைவியாக நடித்தார் நடிகை ரம்யா கிருஷ்ணன். அதன் பிறகு மீண்டும் அந்த அறையும் காட்சி படமாகப்பட்டது என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார் மிஸ்கின்.