Connect with us

தம்பி இறந்த சோகத்திலேயே உயிரை விட்ட அண்ணன்!.. நடிகர் பாண்டியன் குடும்பத்தில் நடந்த கொடுமை!..

Cinema History

தம்பி இறந்த சோகத்திலேயே உயிரை விட்ட அண்ணன்!.. நடிகர் பாண்டியன் குடும்பத்தில் நடந்த கொடுமை!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாரதிராஜா மூலமாக பலர் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளனர். அப்படி அறிமுகமானவர்களில் முக்கியமானவர் நடிகர் பாண்டியன். மண்வாசனை திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.

அதன் பிறகும் கூட அவருக்கு நிறைய படங்களில் வாய்ப்பு கொடுத்து வந்தார் பாரதிராஜா. மேலும் சில படங்களிலும் இவருக்கு அப்போது வாய்ப்பு கிடைத்தது. பாண்டியனுக்கு என்று ஒரு ரசிக வட்டாரமும் அப்பொழுது இருந்தது.

அதனைத் தொடர்ந்து அவரும் ஆண்பாவம், கிழக்கு சீமையிலே போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பாண்டியன் இறுதி கால வாழ்க்கை குறித்து பலரும் அறியாத சில சம்பவங்கள் இருக்கின்றன. பாண்டியன் உடல் நலக் குறைவால் கடந்த ஜனவரி 10 2008 ஆம் ஆண்டு இறந்து போனார்.

பாண்டியனுக்கு ஒரு அண்ணன் உண்டு. அவர் பாண்டியன் மீது மிகவும் அன்புடன் இருந்தவர் ஆவார். 2008 ஆம் ஆண்டு பாண்டியன் இறந்த பொழுது அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார் பாண்டியனின் அண்ணன். இதனால் பாண்டியன் இறந்து சில மாதங்களிலேயே அவரது அண்ணனும் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். அந்த அளவிற்கு தனது தம்பியின் மீது எக்கச்சக்கமாக பாசமாக இருந்திருக்கிறார் பாண்டியனின் அண்ணன்.

Articles

parle g
madampatty rangaraj
To Top