Connect with us

தளபதியை தனுஷ் முன்பு அவமானப்படுத்திய நடிகர்.. பின்விளைவுகள்தான் பயங்கரம்!.

dhanush vijay

News

தளபதியை தனுஷ் முன்பு அவமானப்படுத்திய நடிகர்.. பின்விளைவுகள்தான் பயங்கரம்!.

Social Media Bar

Actor Pawan: சினிமாவைப் பொறுத்தவரை சர்ச்சைகள். கிசுகிசு. வதந்தி இவை எல்லாம் வலம் வந்து கொண்டு தான் இருக்கும். மேலும் நடிகர், நடிகைகளை பற்றிய தனிப்பட்ட விஷயங்கள் சர்ச்சைகளாக வரும் வேளையில் ஒரு சில நடிகர், நடிகைகள் தாங்களாகவே வாய் கொடுத்து சில சர்ச்சைகளில் மாட்டியிருப்பார்கள்.

ஒரு சிலர் பொது மேடையில் எவ்வாறு பேச வேண்டும் என்பதை மறந்து சில சமயங்களில் அவர்கள் மனதிற்கு தோன்றுவதை பேசிவிட்டு வந்து விடுவார்கள். ஆனால் அதுதான் அவர்களுக்கு பின்னாளில் பெரும் வம்பாக வந்து நிற்கும்.

அந்த வகையில் பிரபல வில்லன் ஹீரோ ஒருவர் ஒரு படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட பொழுது தற்பொழுது உள்ள முன்னணி நடிகரை பற்றி பேசி இருப்பது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

நடிகர் பவன்

நடிகர் பவன் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் தோன்றியிருக்கிறார். இவர் பொல்லாதவன், செங்காத்து பூமியிலே, தகராறு ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து பிரபலமானவர்.

actor pawan

மேலும் விலாசம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்தார். ஆனால் இவருக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார். தமிழ், மலையாளம் போன்ற பல மொழி படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் பவன்.

தளபதி படத்தை கலாய்த்த பவன்

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் வெளியா அசுரன் திரைப்படம் 100 நாட்களையும் தாண்டி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. அசுரன் படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெற்ற பொழுது, அதில் நடிகர் பவன், நடிகர் தனுஷ், படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

அப்பொழுது பேசிய நடிகர் பவன் ஒரு படத்திற்கு 100-வது நாள் விழா என்பது சாதாரண விஷயம் அல்ல. தற்பொழுது அது அரிதாக தான் நடக்கிறது. நான் இதற்கு முன்பாக குருவி படத்தில் 150-வது விழாவில் கலந்து கொண்டேன்.

ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை எனக்கூறி சிரித்தார். மேலும் இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி என பேசினார். மேலும் குருவி படத்தை பற்றி பேசும்பொழுது மேடையில் இருந்தவர்கள் சிரித்தார்கள். நடிகர் பவன் குருவி படத்தைப் பற்றி இவ்வாறு கூறியது பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் தற்போது வரை அவருக்கு எந்த படங்களும் அமையவில்லை என தளபதி ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். தற்பொழுது அவர் பேசிய இந்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

To Top