Cinema History
மாசம் 10,000 ரூபாய்தான் எனக்கு சம்பளம்!.. திட்டவட்டமாக கூறியும் காதலனை திருமணம் செய்துக்கொண்ட தமிழ் நடிகை!..
சினிமா உள்ள வரை அதில் காதல் கதைகளுக்கு பஞ்சமே கிடையாது. பிரபல நடிகைகளுக்கு சினி துறையில் உள்ள வேறு பிரபலங்களுடன் காதல் ஏற்பட்டு திருமணம் நடப்பது சகஜமான ஒரு விஷயமாகும். ஆனால் பொதுவாக நடிகைகளை பொறுத்த வரை சினிமாவில் சாதிப்பது என்பதை தாண்டி வாழ்க்கையில் செட்டில் ஆவதற்காகவே நடிகை ஆவார்கள்.
உதாரணமாக பார்த்தால் நடிகை ஆன ஒரு சில காலங்களில் பெரும் புள்ளி ஒருவரை திருமணம் செய்து கொண்டு நடிப்பை விட்டு விடுவார்கள் நடிகைகள். எனவே வாழ்க்கையில் ஒரு பெரும் பிரபலத்தை திருமணம் செய்வதற்கான ஒரு கருவியாக தான் அவர்கள் சினிமாவை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இப்படி இருக்கும் நிலையிலும் சாதாரண நபரை காதலித்து திருமணம் செய்து கொண்ட கதைகளும் சினிமாவில் நடந்திருக்கின்றன. அப்படியான கதை தான் பொன்வண்ணன் மற்றும் சரண்யாவின் காதல் கதை. பொன்வண்ணன் இது குறித்து ஒரு பேட்டியில் கூறும்பொழுது சரண்யா என்னை காதலித்த பொழுது அவரிடம் எனது பொருளாதார நிலையை முழுமையாக கூறினேன்.

அப்பொழுது எனக்கு கிடைத்த சம்பளம் மாதம் 10 ஆயிரம் ரூபாய் தான் நான் அவரிடம் கூறும் பொழுது எனக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் தான் சம்பளம் எனது ஒரு வருட சம்பளத்தை வங்கியில் போட்டு வைத்துள்ளேன். அதில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் இருக்கிறது அந்த வங்கி கணக்கு புத்தகத்தையும் உன்னிடம் கொடுத்து விடுகிறேன்.
திருமணம் செய்த பிறகு மாதம் என்னால் பத்தாயிரம் ரூபாய் தர முடியும் அதற்குள் உன்னால் குடும்பம் நடத்த முடியும் என்றால் என்னை திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார் பொன்வண்ணன். ஆனால் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சரண்யா அதை ஏற்றுக்கொண்டு அவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
