News
தயவு செய்து எனக்காக அதை பண்ணாதீங்க!.. தமிழ் சினிமாவிலேயே இப்படி கேட்ட முதல் நடிகர் ராகவா லாரன்ஸ்தான்!..
தமிழ் சினிமாவில் சின்ன வேலைக்காக ஸ்டுடியோவில் சேர்ந்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உழைத்து டான்ஸ் மாஸ்டரானவர் ராகவா லாரன்ஸ். அதன் பிறகு நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என அனைத்தையும் செய்துவிட்டார் ராகவா லாரன்ஸ்.
சினிமாவிற்கு வந்த காலம் முதலே அனைவருக்கும் நன்மைகளை செய்து வருபவராக லாரன்ஸ் இருக்கிறார். மாற்று திறனாளிகள் பலருக்கும் தனது திரைப்படத்தில் டான்ஸ் ஆடுவதற்கெல்லாம் வாய்ப்பு கொடுத்துள்ளார் ராகவா லாரன்ஸ்.
ரசிகர்களுக்கும் லாரன்ஸ் நல்ல மதிப்பு கொடுத்து வந்துள்ளார். இதுக்குறித்து லாரன்ஸ் ரசிகர்கள் குறித்து பேசும்போது என் படத்தை திரையரங்கில் வந்து பார்த்தால் மட்டும் போதும். என்னை பார்க்க அவர்கள் கூட்டமாக ஆடியோ விழா போன்ற நிகழ்வுகளுக்கு வர தேவையில்லை.

ரசிகர்கள் என்னை பார்க்க வேண்டும் என்று புத்தாடைகள் வாங்கி போட்டுக்கொண்டு வாடகை வேன் புக் செய்து வருகின்றனர். சென்னையில் அறை எடுத்து தங்குகின்றனர். இதற்கெல்லாம் எவ்வளவு செலவாகிறது. அதற்கு பதிலாக ரசிகர்கள் ஒன்று திரண்டு என்னை பார்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தால் நானே ஒரு திருமண மண்டபம் புக் செய்து அவர்கள் ஊருக்கு சென்று அவர்களை பார்த்து வருவேன் என கூறியுள்ளார் லார்னஸ்.
தமிழ் சினிமாவிலேயே இப்படி சொல்லும் மனது வேறு எந்த ஹீரோவுக்கும் கிடையாது என லாரன்ஸை பாராட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.
