Tamil Cinema News
கை கூடாமல் போன ரஜினியின் முதல் காதல்.. யார் அந்த பெண் தெரியுமா?.
நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். கிட்டத்தட்ட பல வருடங்களாக தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் தனக்கென தனி இடத்தை பிடித்து வருகிறார். இன்னமும் கூட ரஜினிகாந்துக்கு இருக்கும் மார்க்கெட் என்பது குறையவே இல்லை என்றுதான் கூற வேண்டும்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் மிகவும் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர்தான். மிகவும் கஷ்டப்பட்டுதான் இவர் சினிமாவில் இப்படியான ஒரு இடத்தை பிடித்துள்ளார். ஆரம்பத்தில் அதிக கஷ்டங்களை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்.
இந்த நிலையில் தனது ஆரம்ப காதல் கதையை குறித்து நடிகர் ரஜினிகாந்த் நடிகர் தேவனிடம் இதுக்குறித்து கூறியுள்ளார். அதை நடிகர் தேவன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறும்போது ரஜினிகாந்திடம் உங்களுக்கு முதல் காதல் இருக்கிறதா? என கேட்டேன்.
அவர் அந்த காதல் கதையை கூறும்போது இறுதியில் அழுதுவிட்டார். இதுக்குறித்து ரஜினிகாந்த் கூறும்போது “அன்று அவள் என்னிடம் சொன்னாள், உங்களுடைய படத்தின் போஸ்டரை நான் பார்க்கணும். கட்டவுட்டை பார்க்கணும். நீங்கள் பெரிய நடிகர் ஆகணும்” அப்படின்னு சொல்லிட்டு போயிட்டா.
அதில் இருந்து இப்போ வரைக்கும் அவளை தேடிக்கிட்டுதான் இருக்கேன். கண்டுப்பிடிக்கவே முடியலை என கூறினார் ரஜினிகாந்த் என அந்த தகவலை பகிர்ந்துள்ளார் நடிகர் தேவன்.
