ஸ்ரீ தேவியை பெண் கேட்டு போன ரஜினிகாந்த்… அந்த சம்பவம் மட்டும் நடக்கலைனா இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிருப்பாங்க!..
Sree devi and Rajinikanth : தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் அறிமுகம் ஆவதற்கு முன்பே கமல்ஹாசனும் ஸ்ரீ தேவியும் கொஞ்சம் பிரபலமாகி இருந்தனர். இவர்கள் மூவரும் சேர்ந்து நடிக்கும்போது அதில் உள்ளதிலேயே குறைவான சம்பளம் வாங்குபவராக ரஜினிகாந்த் இருந்து வந்தார்.
அந்த சமயத்தில் ரஜினிகாந்திற்கு அவ்வளவாக தமிழில் பேச வராது. இதனால் அதிகமாக இயக்குனர்களின் விமர்சனத்துக்குள்ளானார் ரஜினிகாந்த். இந்த நிலையில் அவருக்கு அப்போது மிகுந்த ஆறுதலாக இருந்தவர் நடிகை ஸ்ரீ தேவி.
இத்தனைக்கும் அப்போது நடிகை ஸ்ரீ தேவி பிரபலமான நடிகையாக இருந்தார். இருந்தாலும் ரஜினிகாந்துடன் நல்ல நட்பில் இருந்ததால் அவரிடம் ஆதரவாக பழகி வந்தார் ஸ்ரீ தேவி. அதன் பிறகு ஸ்ரீதேவிக்கு இணையான ஒரு பெரும் நடிகரானார் ரஜினிகாந்த்.

இந்த நிலையில் ஸ்ரீதேவியை திருமணம் செய்ய ஆசைப்பட்டார் ரஜினிகாந்த். இதனை தொடர்ந்து இயக்குனர் மகேந்திரனை அழைத்துக்கொண்டு ஸ்ரீதேவியின் அம்மாவிடம் பெண் கேட்பதற்காக அவர்கள் வீட்டிற்கு சென்றார் ரஜினிகாந்த். அந்த சமயம் ஸ்ரீ தேவி வீட்டில் ஏதோ விசேஷம் நடந்துக்கொண்டிருந்தது.
ரஜினி சரியாக ஸ்ரீ தேவியின் தாயிடம் பேச செல்லும்போது வீட்டில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. அதை ஒரு மூட நம்பிக்கையாக கருதிய ரஜினிகாந்த் ஸ்ரீதேவியை பெண் கேட்காமலே சென்றுவிட்டார். இதனை ஒரு நிகழ்வில் கூறிய மகேந்திரன் மேலும் கூறும்போது அன்று மட்டும் மின்சாரம் தடை படாமல் இருந்திருந்தால் ரஜினிகாந்தும் ஸ்ரீ தேவியும் திருமணம் செய்திருப்பர் என கூறியுள்ளார்.