கரண்ட் இல்லாத நேரத்தில் அதை பண்ணுனார்!.. பல வருடம் கழித்து ரஜினி குறித்து ரம்பா வெளியிட்ட விஷயம்!..

Actor Rajinikanth and Ramba: தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட சில கதாநாயகிகளில் மிக முக்கியமானவர் ரம்பா. ரம்பாவை பார்ப்பதற்காகவே அப்போது திரையரங்கிற்கு சென்று ரசிகர்கள் பலர். அந்த அளவிற்கு தனித்துவமான நடிகையாக ரம்பா இருந்தார்.

அதற்கு முக்கிய காரணம் அவர் கிட்டத்தட்ட ஹாலிவுட் கதாநாயகிகள் போல இருந்தார். ஹாலிவுட் கதாநாயகிகள் அணியும் கவர்ச்சி உடைகள் எல்லாம் ரம்பாவுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தன. இந்த நிலையில் பெரும் நடிகர்கள் பலருடனும் நடித்திருக்கிறார் ரம்பா.

நடிகர் ரஜினிகாந்துடன் இவர் சேர்ந்து நடித்த திரைப்படம் அருணாச்சலம். இந்த படத்தை சுந்தர் சி இயக்கினார். அப்போது பாலிவுட் சினிமாவிலும் ரம்பாவிற்கு வரவேற்பு இருந்ததால் அவர் பாலிவுட்டிலும் கூட நடித்து வந்தார். அருணாச்சலம் படத்தில் நடித்துக்கொண்டிருந்த அதே சமயத்தில் பாலிவுட்டில் பந்தன் என்கிற சல்மான்கான் படத்தில் ரம்பா நடித்து வந்தார்.

Social Media Bar

அப்போது ஹைதராபாத்தில் அருணாச்சலம் படப்பிடிப்பு நடந்தப்போது அங்கு பந்தன் படத்தின் படப்பிடிப்பும் நடந்தது. அங்கு சல்மான்கான் மற்றும் மற்ற நடிகர்களை பார்த்த ரம்பா அவர்களை கட்டிப்பிடித்து வரவேற்றார். பாலிவுட் சினிமாவில் பார்க்கும்போது கட்டிப்பிடிப்பது என்பது சகஜமான விஷயமாக இருந்தது.

ஆனால் ரஜினிகாந்திற்கு இது மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் படப்பிடிப்பில் சத்தம் போட துவங்கினார். என்ன பிரச்சனை என ரம்பா கேட்டப்போது அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர்கள் என்றால் மட்டும் கட்டிப்பிடித்து வரவேற்கிறீர்கள் தமிழ் நடிகர்கள் என்றால் மட்டும் வெறும் வணக்கம் மட்டும்தான் வைக்கிறீர்கள் என கோபப்பட்டுள்ளார்.

மேலும் ஒருமுறை படப்பிடிப்பில் கரண்ட் கட் ஆகி அனைத்து விளக்குகளும் அணைந்தப்போது யாரோ ரம்பாவை தொட்டுவிட்டு சென்றுள்ளனர். அது யார் என்று பார்க்கும்போது ரஜினிகாந்த் அதை செய்திருக்கிறார் என தெரிந்துள்ளது. இதனை ரம்பா ஒரு பேட்டியில் கூறிய நிலையில் ரம்பாவிடம் அத்துமீறிய ரஜினி என்கிற ஹேஸ்டாக் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.