ஒரு பெண்ணுக்கு நாகரிகம் என்பது முக்கியம்!.. த்ரிஷா விஷயம் குறித்து பதிலளித்த நடிகர் ரஞ்சித்!..
Actor Ranjith: சினிமா நடிகர்களில் தற்சமயம் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசும் நடிகர்களில் நடிகர் ரஞ்சித்தும் இணைந்திருக்கிறார். நடிகர் ரஞ்சித் தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் பிரபலமாக நடித்து வந்த நடிகர் ஆவார்.
அவர் சில திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். தற்சமயம் இவர் ஒரு திறப்பு விழாவில் கலந்து கொண்ட பொழுது இவரிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் அவரிடம் நடிகை திரிஷா விவகாரம் குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ரஞ்சித் திரிஷா விவகாரத்தை பொருத்தவரை அந்த அரசியல்வாதிகளிடமும் திரிஷா விடமும் எனக்கு நெருங்கிய பழக்கம் கிடையாது. ஆனால் யாராக இருந்தாலும் ஒரு பெண்ணிற்கு நாகரிகம், மரியாதை என்பது முக்கியம். அதை சீண்டும் வகையில் பேசக்கூடாது. அது நடிகையாக இருந்தாலும் எந்த பெண்ணாக இருந்தாலும் அவர்களை குறித்து அவதூறு பேசுவது என்பது தவறுதான் என்று கூறியிருக்கிறார்.

பொதுவாகவே மக்கள் மனதில் நடிகைகள் என்றாலே அது குறித்து தவறான கண்ணோட்டம் தான் இருக்கிறது என்று பேசிய ரஞ்சித் தமிழகம் குறித்து பேசும் பொழுது தமிழகத்தில் நூற்றுக்கு 90% மது இருக்கிறது ஒவ்வொரு முறை அரசாங்கம் அமைக்கும் பொழுதும் மதுவை குறைப்போம் என்று கூறிவிட்டு பிறகு கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு பதிலாக அதிகரிக்கின்றனர்.
அதேபோல காசுக்கு ஓட்டை விற்கின்றனர். எனவே மக்களும் திருந்த வேண்டும். எனவே ஒரு விஜய் அல்ல ஆயிரம் விஜய் வந்தாலும் தமிழகத்தை மாற்ற முடியாது இதுவரை வாக்குறுதி கொடுத்த அரசியல்வாதிகள் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று யாரும் அது குறித்து கேள்வி கேட்கவில்லை. எனவே மக்கள் மாற வேண்டும் என்று கூறி இருக்கிறார் நடிகர் ரஞ்சித்.