ஒரு காலத்துல என்ன விரட்டி விட்ட இயக்குனர் இப்ப கமல் படத்துல நடிக்க கூப்பிடுறார்!.. வாழ்க்கை நிகழ்வை பகிர்ந்த சமுத்திரக்கனி!..
தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக சேர்ந்து பிறகு நடிப்பிலும் பெரும் உயரத்தை தொட்டவர் நடிகர் சமுத்திரகனி. சாட்டை திரைப்படத்திற்கு பிறகு சமுத்திரக்கனியின் நடிப்புக்கு அதிக வரவேற்பு கிடைக்க துவங்கியது, மேலும் எந்த ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதை சிறப்பாக நடிக்க கூடியவர் சமுத்திரக்கனி.
இவர் தன்னுடைய இளம் வயதிலேயே தந்தையிடம் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்தார். அந்த நிலையில் வெகு காலங்கள் வாய்ப்புகளே கிடைக்காமல் கஷ்டப்பட்டு வந்தார் சமுத்திரக்கனி.

அப்போதுதான் இந்தியன் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்தியன் திரைப்படத்தில் ஆ.டி.ஓ அலுவலக காட்சிகளுக்கு அதிகமாக ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள் தேவைப்பட்டனர். இந்த நிலையில் அதற்காக ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கு பெயர் எழுதும்போது சமுத்திரக்கனி தனது பெயரையும் கொடுத்தார்.
ஆனால் அவரது பெயரை படக்குழுவை சேர்ந்தவர்கள் எடுத்துக்கொள்ளவில்லை. இந்த நிகழ்வை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ள சமுத்திரக்கனி கூறும்போது அப்போது ஒரு ஜுனியர் ஆர்ட்டிஸ்டுக்கே எனக்கு தகுதியில்லை என அனுப்பினார்கள் ஆனால் இப்போது இந்தியன் 2 திரைப்படம் இயக்கும்போது அதில் இயக்குனர் ஷங்கரே என்னை அழைத்து வாய்ப்பளித்துள்ளார் என்கிறார் சமுத்திரக்கனி.