Connect with us

அந்த படத்துல வந்த சீன் நிஜமாவே எனக்கு நடந்தது!.. நடு ராத்திரியில் போலீஸிடம் சிக்கிய சந்தானம்!.. அட பாவமே!..

simbu

Cinema History

அந்த படத்துல வந்த சீன் நிஜமாவே எனக்கு நடந்தது!.. நடு ராத்திரியில் போலீஸிடம் சிக்கிய சந்தானம்!.. அட பாவமே!..

Social Media Bar

Actor Santhanam: ஒரு காலத்தில் தமிழ் சினிமா பிரபலங்களால் வெகுவாக வெறுக்கப்பட்டவர் என்றால் அது நடிகர் சந்தானம்தான். ஏனெனில் விஜய் டிவியில் லொள்ளு சபா என்கிற தொடரின் மூலமாகத்தான் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் சந்தானம்.

லொள்ளு சபா நிகழ்ச்சியை பொருத்தவரை தமிழ் சினிமாவில் அப்போது வெளியாகி இருந்த திரைப்படங்களை கேலி செய்யும் வகையாக மறு உருவாக்கம் செய்வதுதான் லொள்ளு சபா நிகழ்ச்சியின் முக்கிய கருவே.

santhanam-new-01
santhanam-new-01

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசனில் துவங்கி விஜய் அஜித் வரை பலரையும் கேலி செய்து தொடர்களை வெளியிட்டு வந்தனர் லொள்ளு சபா குழுவினர். இதனால் ரசிகர்களாலேயே அதிக அச்சுறுத்தலுக்கு உள்ளானார்கள். இருந்தாலும் கூட தொடர்ந்து அதை செய்து வந்தார்கள் லொள்ளு சபா குழுவினர்.

அப்படி இருந்தும் கூட தமிழ் சினிமாவில் மிகப் பெரும் உயரத்தை தொட்டார் சந்தானம். இந்த நிலையில் படத்தில் வைக்கப்பட்ட ஒரு காட்சியை தன்னுடைய வாழ்க்கையில் நிஜமாகவே நடந்தது என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் சந்தானம்.

வாழ்க்கையில் நடந்த சம்பவம்:

ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் சந்தானம் போக்குவரத்து காவல் துறையினரிடம் மாட்டுவது போன்ற காட்சி ஒன்று இருக்கும். அதில் அவரது மிமிக்ரி திறனை பார்த்து ஒரு இரவு முழுக்க அவரை மிமிக்ரி செய்ய சொல்வதாக காட்சி ஒன்று காட்டப்பட்டிருக்கும்.

santhanam-2
santhanam-2

லொள்ளு சபாவில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் உண்மையிலேயே அப்படி ஒரு நிகழ்வு நடந்ததாக கூறுகிறார் சந்தானம். அவர் வேலையை முடித்துவிட்டு இரவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பொழுது அவரை மறைத்த போலீசார் இந்த இரவில் எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள் என கேட்கும் பொழுது லொள்ளு சபா நிகழ்ச்சி குறித்து கூறியிருக்கிறார் சந்தானம்.

அப்படி என்றால் நீங்கள் எந்த நடிகரை போலவும் பேசுவீர்களா என்று அந்த போலீஸ் கேட்க ஆமாம் என்று சந்தானமும் ஒரு சில குரல்களில் பேசி காட்டியுள்ளார். அதனை கண்டு ஆச்சரியம் அடைந்த போலீசார் அங்கு இருந்த அவரது நண்பர்களை அழைத்து அன்று இரவு நடு இரவு வரை சந்தானத்தை மிமிக்ரி செய்ய வைத்துள்ளார். அந்த நிகழ்வைதான் படத்தில் காட்டும் விதமாக அந்த காட்சியை வைத்திருக்கிறார் சந்தானம்.

To Top