Connect with us

டேய் டைம் வேஸ்ட் பண்ணாம போடா..! ஐந்து முக்கிய நடிகர்களை வச்சு செய்த நடிகர் ஷியாம்..!

actor shaam

News

டேய் டைம் வேஸ்ட் பண்ணாம போடா..! ஐந்து முக்கிய நடிகர்களை வச்சு செய்த நடிகர் ஷியாம்..!

Social Media Bar

Actor Shyam was the most popular actor who made his debut in Tamil cinema in the year 2000. But within some time, his opportunities in cinema began to decrease. In a recent interview, Shyam said the reason for that

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வரிசையாக வெற்றி படங்களாக கொடுத்து வந்தவர் நடிகர் ஷியாம். நடிகர் ஷியாம் சினிமாவிற்கு வந்த போது அவர் மிகப்பெரிய நடிகராக மாறுவார் என்று தோன்றும் அளவிற்கு அவருடைய திரைப்படங்கள் இருந்தன.

அவர் நடித்த இயற்கை லேசா லேசா மாதிரியான நிறைய திரைப்படங்கள் அப்பொழுது நல்ல வெற்றியை கொடுத்து வந்தன. இருந்தாலும் கூட பிறகு நடிகர் ஷாமுக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

புது முக நடிகர்கள் எண்ட்ரி:

shaam

shaam

காலப்போக்கில் ஷாம் சினிமாவில் பெரிதாக அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார். இப்பொழுது கதாநாயகனாக இல்லாமல் சின்ன சின்ன வேடங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் கூட நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது ஏன் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார்.

அவர் கூறும் பொழுது 2002இல் நான் சினிமாவிற்கு அறிமுகமாகி படங்களில் நடிக்க துவங்கினேன். ஆனால் 2003 ஆம் ஆண்டில் துவங்கி தொடர்ந்து நடிகர் தனுஷ், சிம்பு, விஷால், ஜீவா, ஜெயம் ரவி என்று புதுமுக நடிகர்கள் சினிமாவிற்குள் களம் இறங்கினர்.

இவர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் தயாரிப்பாளரின் மகனாகவோ அல்லது இயக்குனரின் மகனாகவோ இருந்தனர் பிரபலங்களின் மகன்கள் என்பதால் இவர்களுக்கு என்னை விட வாய்ப்புகள் அதிகமாகவே இருந்தன இதனால் பெரிய பெரிய படங்களில் எனக்கு முன்பே அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்துவிட்டன என்று கூறியிருக்கிறார் நடிகர் ஷியாம்.

Articles

parle g
madampatty rangaraj
To Top