Connect with us

படத்தோட திரைக்கதையை படிச்சிட்டுதான் முடிவை சொல்ல முடியும்!.. ரஜினிகாந்த் மகளை வெயிட்டிங் லிஸ்டில் போட்ட சித்தார்த்!..

aishwarya rajinikanth siddharth

News

படத்தோட திரைக்கதையை படிச்சிட்டுதான் முடிவை சொல்ல முடியும்!.. ரஜினிகாந்த் மகளை வெயிட்டிங் லிஸ்டில் போட்ட சித்தார்த்!..

Social Media Bar

Actor Siddharth: பாய்ஸ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். ஆனால் அந்த திரைப்படம் அந்தளவிற்கு பெரிதாக வரவேற்பை பெறவில்லை எனலாம். இதனையடுத்து சித்தார்த் தமிழில் இன்னும் நிறைய படங்களில் நடிக்க துவங்கினார்.

அவற்றில் பல அவருக்கு வெற்றி படங்களாக அமைந்தன. இதற்கு நடுவே தெலுங்கிலும் சில திரைப்படங்களில் நடித்தார். தற்சமயம் தமிழில் பலரும் அறிந்த ஒரு நடிகராக சித்தார்த் இருக்கிறார். சமீபத்தில் இவர் நடித்த சித்தா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

siddharth1
siddharth1

இந்த நிலையில் நல்ல நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சித்தார்த். இதற்கு நடுவே ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சித்தார்த்தை வைத்து திரைப்படம் இயக்க நினைத்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முதலில் தனுஷை வைத்து இயக்கிய 3 திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது.

சித்தார்த் எடுத்த முடிவு:

ஆனால் தற்சமயம் அவர் இயக்கத்தில் வெளியான லால் சலாம் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. எனவே அடுத்து சித்தார்த்தை வைத்து நல்ல வெற்றி படத்தை கொடுக்க நினைக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

ஆனால் ஏற்கனவே அவர் இயக்கிய படம் தோல்வி அடைந்ததால் அவரது இயக்கத்தில் நடிப்பதற்கு யோசித்து வருகிறார் சித்தார்த். எனவே படத்தின் முழு திரைக்கதையையும் கொடுங்கள். அதை படித்துவிட்டுதான் நான் நடிக்க முடியுமா? முடியாதா? என்பதை கூற முடியும் என கூறிவிட்டார் சித்தார்த்.

இதனையடுத்து வேறு கதாநாயகனை வைத்து அந்த திரைப்படத்தை இயக்க முடிவெடுத்துள்ளார் சித்தார்த் என பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

To Top