Connect with us

படப்பிடிப்புக்கு லேட்டா வர இதுதான் காரணம்.. திரையுலகை வச்சி செய்த சிம்பு.. இது தெரியாம இவரை திட்டிட்டோமே?

Tamil Cinema News

படப்பிடிப்புக்கு லேட்டா வர இதுதான் காரணம்.. திரையுலகை வச்சி செய்த சிம்பு.. இது தெரியாம இவரை திட்டிட்டோமே?

Social Media Bar

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவர். மாநாடு, பத்துதல மாதிரியான திரைப்படங்கள் நடிகர் சிம்புவுக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது.

இந்த நிலையில் அடுத்து நடிக்கும் திரைப்படங்களின் கதைக்களங்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. வழக்கமான சண்டை படங்கள் என்று இல்லாமல் பல்வேறு வகையான கதைகளங்களை அவர் தேர்ந்தெடுத்து நடித்து வருவதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

இதற்கு நடுவே முன்பு சிம்புவின் மீது ஒரு குற்றச்சாட்டு எப்போதுமே இருந்து வந்தது. எந்த படத்திற்குமே சிம்பு படப்பிடிப்புக்கு சரியான சமயத்திற்கு வர மாட்டார். இதனால் படப்பிடிப்பு சரியாக நடக்காது என்று கூறுவதுண்டு.

ஆனால் மணிரத்தினத்தின் திரைப்படமான தக் லைஃப் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு மட்டும் சிம்பு ஒழுங்காக வருவதாக பேச்சுக்கள் இருந்தன. எனவே அவரிடம் கேள்வி கேட்ட நிரூபர் அது ஏன் மணி சார் படத்துக்கு மட்டும் சரியாக வருகிறீர்கள் என கேட்டிருந்தனர்.

simbu

simbu

அதற்கு பதிலளித்த சிம்பு ஒரு படப்பிடிப்பு சரியாக நடக்க வேண்டும் என்றால் நடிகருக்கு முன்பு இயக்குனர் படப்பிடிப்புக்கு வர வேண்டும். இயக்குனர் சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வந்தால்தான் நடிகர்களும் சரியாக வந்து நடிப்பார்கள்.

அதே போல முதலில் ஒரு கதையை சொல்லிவிட்டு பிறகு படப்பிடிப்பு தளத்திற்கு வந்து கதையை மாற்றி குழப்பம் செய்ய கூடாது. அந்த விஷயத்தில் மணிரத்தினம் சார் சரியான நேரத்தில் படம் எடுக்க கூடியவர். ஒரு நடிகரின் கால் ஷீட்டை அவர் வேஸ்ட் செய்ய மாட்டார் என கூறியுள்ளார் சிம்பு,

இதன் மூலம் முன்பு நடித்த திரைப்படங்களில் தாமதமாக வந்ததற்கு இயக்குனர்களின் பொறுப்பில்லா தனம்தான் காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார் சிம்பு.

To Top