Connect with us

என் மனைவி வலியோடு கம்பேர் செய்யும்போது இதெல்லாம் ஒரு வலியே இல்ல.. ஓப்பன் டாக் கொடுத்த எஸ்.கே

sivakarthikeyan

News

என் மனைவி வலியோடு கம்பேர் செய்யும்போது இதெல்லாம் ஒரு வலியே இல்ல.. ஓப்பன் டாக் கொடுத்த எஸ்.கே

Social Media Bar

சினிமாவில் கஷ்டப்பட்டு தனக்கான ஒரு மார்க்கெட்டை வைத்திருக்கும் நடிகர் என்றால் சிவகார்த்திகேயன். சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வளம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் அவரின் வளர்ச்சியை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகப்படுத்திக் கொண்டு அதன் பிறகு மற்ற விருது வழங்கும் விழா போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார்.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு முன்னணி நடிகராக மாறுவதற்கு முன்பிலிருந்து ரசிகர் பட்டாளம் ஏராளம். அந்த வகையில் தற்போது தன் மனைவி பற்றி சிவகார்த்திகேயன் கூறியிருக்கும் ஒரு தகவலானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன்

சினிமாவில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது அறிமுகம் ஆகும் பல நடிகர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார்.

திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் மெரினா திரைப்படத்தில் கதாநாயகனாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு தனுஷ் இயக்கிய 3 திரைப்படத்தில் காமெடியனாக தோன்றினார்.

sivakarthikeyan

பிறகு மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன் என பல திரைப்படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கிறார்.

எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காத சிவகார்த்திகேயன் சமீப காலங்களாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்நிலையில் அவர் தன்னுடைய மனைவி பற்றி கூறியிருக்கும் ஒரு தகவலானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் தன் மனைவி பற்றி கூறியது

சில நாட்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் மீது பிரபல இசை அமைப்பாளர் ஒருவர் குற்றம் சாட்டினார். அது சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவர் உடன் சிவகார்த்திகேயனுக்கு திருமணம் நடைபெற்றது. தற்போது ஆராதனா, குகன் மற்றும் பவன் என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர்.

sk wife

இந்நிலையில் மேடை ஒன்றிில் தன் மனைவியை ஏற்றி, அவர் பேசியிருக்கும் கருத்தானது அனைவரையும் உருகச் செய்திருக்கிறது. அவர் கூறும்போது எனக்கு எப்போதும் திரைத்துறையில் பல மன உளைச்சல்கள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறது. நான் சினிமாவை விட்டு விலகி விட வேண்டும் என முன்பே முடிவு செய்தேன். ஆனால் என்னுடைய மனைவி இது உங்களுக்கு பிடித்த வேலை இதை நீங்கள் செய்யுங்கள் உங்களுக்கு பக்க பலமாக நான் இருக்கிறேன் என கூறினார்.

மேலும் எங்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. மூன்றுமே சிசேரியன் மூலம் பிறந்த பிள்ளைகள் தான். ஆப்ரேஷன் தியேட்டரில் நான் அவருடன் இருந்தேன். என் மனைவி பட்ட வலியை நான் பார்த்தேன். அந்த வலியை பார்க்கும் போது நான் கஷ்டப்படுவதெல்லாம் என்ன வலி என எனக்கு தோன்றும். எனக்கு எப்போதும் பக்க பலமாக இருப்பது என்னுடைய மனைவி தான் என மிகவும் எமோஷனலாக கூறியிருப்பார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top