வாய்ப்புக்காக பல்லை பிடுங்கி போட்ட நடிகர் சிவக்குமார்!.. இதெல்லாம் ஒரு காரணமாங்க!..
Actor Sivakumar : கமல்ஹாசன் ரஜினிகாந்த் எல்லாம் திரைத்துறையில் பெரும் இடத்தை பிடிப்பதற்கு முன்பே தமிழ் சினிமாவில் பெரும் உச்சத்தை தொட்டவர் நடிகர் சிவக்குமார். ஆம் எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு பிறகு அடுத்த தலைமுறை நடிகர்களாக சிவக்குமாரும், ஜெய்சங்கரும் சினிமாவிற்கு வந்தனர்.
அப்போது கல்லூரி படித்து வந்த இளைய தலைமுறையினருக்கு பிடித்த நடிகர்களாக இவர்கள் இருந்தனர். நடிகர் ரஜினிகாந்த் நடிகராக அறிமுகமானப்போது சிவக்குமார் ஹீரோவாக நடித்த கவிக்குயில் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.

ஆனால் சிவக்குமாரும் கூட தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டார். அப்போது பிரபல இயக்குனராக இருந்த ஏ.பி நாகராஜன் இயக்கத்தில் கந்தன் கருணை திரைப்படத்தில் முருகனாக நடிக்க அப்போது ஆள் தேடி கொண்டிருந்தனர்.
முருகனுக்கு மனைவிகளாக கே.ஆர் விஜயாவும் ஜெயலலிதாவும் நடிப்பதால் அதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என கருதினார் சிவக்குமார். எனவே அவர் முருகனாக நடித்து காட்டினார். சரி நாங்கள் முடிவு செய்துவிட்டு உங்களை அழைக்கிறோம் என சிவக்குமாரை அனுப்பி வைத்தனர் படக்குழுவினர்.

அப்போது சிவக்குமாருக்கு முன்னாள் புதிதாக ஒரு பல் முளைத்திருந்தது. அது அந்த முருகன் கதாபாத்திரத்தை கெடுக்கும் வகையில் இருப்பதாக ஏ.பி நாகராஜன் கருதினார். இந்த செய்தியை எப்படியோ அறிந்துக்கொண்ட சிவக்குமார் பல் மருத்துவமனை சென்று அந்த பல்லை அகற்றிவிட்டு வந்தார்.
அவர் நடிப்பின் மீது இவ்வளவு துடிப்போடு இருப்பதை அறிந்ததும் வியந்து போனார் ஏ.பி நாகராஜன். உடனே அவரை அழைத்து அந்த படத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார் இயக்குனர்.