Connect with us

அவனுக்கு மொத சோறு போட்டு உடம்ப தேத்துங்க!.. அதுக்கு அப்புறம்தான் ஷூட்டிங்!. ஹிந்தி நடிகரை திரும்ப அனுப்பிய விஜயகாந்த்!.

sonu sood vijayakanth

News

அவனுக்கு மொத சோறு போட்டு உடம்ப தேத்துங்க!.. அதுக்கு அப்புறம்தான் ஷூட்டிங்!. ஹிந்தி நடிகரை திரும்ப அனுப்பிய விஜயகாந்த்!.

Social Media Bar

தமிழ் சினிமாவில் அதிகமாக புகழப்படும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். ஆரம்பம் முதலே பெரும்பாலும் விஜயகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் ஆக்‌ஷன் திரைப்படங்களாகதான் இருக்கும். இடை இடையே வானத்தை போல, சொக்க தங்கம், மாதிரியான குடும்ப திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

விஜயகாந்திற்கு எல்லா கதாபாத்திரங்களும் நடிப்பதற்கு ஒத்து வருவதே இதற்கு காரணமாகும். இப்போது உள்ள விஜய் அஜித் மாதிரியான நடிகர்கள் பெரும்பாலும் ஒரு சில ஆக்‌ஷன் திரைப்படங்களை வைத்து ஹிட் கொடுத்ததும் தொடர்ந்து ஆக்‌ஷன் திரைப்படங்களாகவே நடித்து வருகின்றனர்.

Vijayakanth
Vijayakanth

ஆனால் ரமணா மாதிரியான ஆக்‌ஷன் திரைப்படத்தை கொடுத்த பிறகும் கூட அடுத்த வருடமே குடும்பங்கள் கொண்டாடும் சொக்கத்தங்கம் திரைப்படத்தை கொடுத்தார் விஜயகாந்த். இந்த நிலையில் நடிகர் சோனு ஒருமுறை விஜயகாந்துடன் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

நிறைய விஜயகாந்த் திரைப்படங்களில் பாகிஸ்தான் தீவிரவாதியாக சோனுதான் நடித்திருப்பார். அதே போல க்ளைமேக்ஸில் அவருக்கும் விஜயகாந்திற்கும் இடையே கடுமையான சண்டை காட்சிகள் இருக்கும். இந்த நிலையில் முதன் முதலாக சோனுவை விஜயகாந்த் பார்த்தப்போது அவர் கொஞ்சம் ஒல்லியாகதான் இருந்தார்.

அதனை கண்ட விஜயகாந்த், வில்லன் என்றால் நல்ல உடல்வாகு இருக்க வேண்டாமா? இவன் என்ன என்னை விட ஒல்லியாக இருக்கிறான் என்றவர் உதவி இயக்குனரை அழைத்து இவனுக்கு நிறைய உணவு கொடுங்கள் இன்னும் ஆறு மாதத்தில் இவன் 78 கிலோ எடை வர வேண்டும். அதற்கு பிறகுதான் படப்பிடிப்பு என கூறிவிட்டார்.

அதே போல உணவுகளை உண்டு ஆறு மாதத்தில் உடல் எடையை அதிகரித்தார் சோனு. பிறகு அவரை பார்த்த விஜயகாந்த் இப்பதான்யா வில்லன் மாதிரி இருக்க எனக்கூறி அவருடன் நடித்துள்ளார். இப்படி தமிழ்நாட்டில் மட்டுமின்றி வட நாட்டு நடிகருக்கும் சோறு போட்டவராக விஜயகாந்த் இருக்கிறார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top