Tuesday, March 17, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
actor soori

படப்பிடிப்பில் காலையில் இருந்து சூரியை பட்டினி போட்ட இயக்குனர்.. பரோட்டா சீனுக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா?

by Sakthi
August 20, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடிக்கும் பலர் தற்போது முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாக இருக்கிறார்கள். பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்று நடித்த நடிகர்கள் தற்போது முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றிருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தன்னுடைய வாழ்க்கையைதொடங்கிய சூரி தற்போது பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இவருக்கு ஆரம்பத்தில் மக்களிடையே பிரபலம் அடைய வைத்த காமெடி தான் பரோட்டா சாப்பிடும் காட்சி. இது ரசிகர்களுக்கிடையே பிரபலமான நகைச்சுவை காட்சியாகும். இந்த காட்சி எடுக்கும் போது சூரி தன்னுடைய அனுபவத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். தற்போது இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் சூரி

சினிமா பின்புலம் எதுவும் இல்லாமல் தன்னுடைய திறமையை மட்டும் நம்பி சினிமாவிற்குள் நுழைந்த சூரி ஆரம்ப காலகட்டத்தில் பின்னணி நடிகராக நடித்து வந்தார். இவர் வெண்ணிலா கபடி குழுவின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சையமான நடிகராக மாறினார். அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயனுடன் பல படங்களில் காமெடியாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.

soori

இவரின் தனித்துவமான நகைச்சுவைக்கு ரசிகர் பட்டாளம் உருவாக தொடங்கிய நிலையில் பல படங்களில் நகைச்சுவை நடிகராக தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்தார். இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை பாகம் ஒன்றில் நடித்து பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து தற்போது கருடன் கொடுக்காளி ஆகிய திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்தை ஏற்று நடித்து உள்ளார்.

பரோட்டா காமெடி எடுக்கும் போது நடிகர் சூரிக்கு நடந்த சம்பவம்

நடிகர் சூரியை மக்களுக்கு பிரபலப்படுத்தியது வெண்ணிலா கபடி குழுவில் வரும் பரோட்டா நகைச்சுவை காட்சி. இது குறித்து அவர் கூறும் போது, அந்தக் காட்சி இரவு 10 மணிக்கு படமாக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பில் எனக்கு காலையிலிருந்து சாப்பாடு எதுவும் கொடுக்கக் கூடாது என்று கூறிவிட்டார்கள்.

டீ கொடுக்கும் போது கூட சிறிதளவு தான் கொடுத்தார்கள். மேலும் அந்த காட்சியில் நான் நடிக்கும் போது 13 பரோட்டாக்கள் சாப்பிட்டேன். ஏனென்றால் காலையில் இருந்து நான் சாப்பிடாமல் இருந்தேன். மேலும் 13 பரோட்டாக்கள் சாப்பிடும் போது குமட்டிக்கொண்டு வரும் அதனால் இரண்டு பரோட்டாவை யாருக்கும் தெரியாமல் வீசி விடுவேன். ஆனால் அதனை இயக்குனர் பார்த்துவிட்டு இதுபோல நீ செய்தால் மீண்டும் நடிக்கச் சொல்லுவேன் அதனால் ஒழுங்காக நடி என்று கூறினார்.

காட்சியை எடுத்த பிறகு இயக்குனர் சொன்னார், இந்த காட்சியை சாப்பிட்டு நடித்தால் ஏதோ படத்திற்காக நீ நடிப்பது போல தோன்றும். முகம் காட்டி கொடுத்துவிடும். ஆனால் இப்போது நீ உண்மையாக நடித்தது போல இருக்கும். அதனால் தான் காலையில் இருந்து உனக்கு சாப்பாடு எதுவும் கொடுக்கவில்லை என இயக்குனர் கூறியதாக நடிகர் சூரி பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.

Tags: tamil cinemaதமிழ் சினிமா
Previous Post

போட்டோ எடுக்க வந்த ரசிகரை அடித்த பிரபலங்கள்.. லிஸ்ட்ல ஆண்டவரும் இருக்கார்!..

Next Post

தமிழில் எக்கச்சக்க ஹிட் கொடுத்த மெலோடி கிங் வி.வி பிரசன்னா… இந்த பாட்டு எல்லாம் இவர் பாடுனதா?

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
vv prasanna

தமிழில் எக்கச்சக்க ஹிட் கொடுத்த மெலோடி கிங் வி.வி பிரசன்னா… இந்த பாட்டு எல்லாம் இவர் பாடுனதா?

Recent Updates

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved