News
அடுத்து லிப் லாக் சீன் தான்!.. அடுத்த படம் குறித்து சூரி பகிர்ந்த தகவல்
தற்சமயம் தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சூரி இருந்து வருகிறார். வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் காமெடி நடிகராக அறிமுகமான சூரி அதன் மூலமாக தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்றார்.
தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்தார் முக்கியமாக சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காம்போவிற்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
நடிப்பில் திறமை:
தொடர்ந்து சூரி காமெடியனாக நடித்து வந்த பொழுதும் ஒரு நடிகராக அவரிடம் நல்ல நடிப்பு திறமை இருக்கிறது என்பது விடுதலை திரைப்படம் வெளியான போது தான் தெரிந்தது.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படம் நடிகர் சூரியின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய திரைப்படம் எனக் கூறலாம். அதனை தொடர்ந்து வாய்ப்புகள் பெற்று திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார் சூரி.
முத்தக்காட்சிகள்:
என்னதான் வளர்ந்து வரும் கதாநாயகன் என்றாலும் கூட டீசண்டான காதல் காட்சிகளை கொண்டுதான் திரைப்படங்களில் நடித்த வருகிறார் சூரி. இந்த நிலையில் அவரிடம் ஒரு பேட்டியில் பேசும் பொழுது கதாநாயகிகளுடன் முத்த காட்சிகள் உள்ளது போன்ற படங்கள் இருந்தால் அதில் நடிப்பீர்களா என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்து சூரியன் எந்த காலத்தில் அப்படியான காட்சிகளில் மட்டும் நான் நடிக்க மாட்டேன் என்று தெள்ளத் தெளிவாக பேசியிருக்கிறார். இன்னும் சூரியின் நடிப்பில் உருவான கொட்டுக் காளி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை திரைப்பட விழாக்களில் மட்டுமே அவை ஓடிக் கொண்டிருக்கின்றன.
