Connect with us

சின்ன கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்த எனக்கு பெரும் வாய்ப்பு வாங்கி கொடுத்தவர் வடிவேலு!.. மனம் திறந்த காமெடி நடிகர்!..

vadivelu soundar

Cinema History

சின்ன கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்த எனக்கு பெரும் வாய்ப்பு வாங்கி கொடுத்தவர் வடிவேலு!.. மனம் திறந்த காமெடி நடிகர்!..

Social Media Bar

Actor vadivelu: சாதாரண துணை நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு மக்களிடம் செல்வாக்கை பெற்று பெரும் உயரத்தை தொட்டவர் நடிகர் வடிவேலு.

மற்ற நடிகர்களை போலவே சினிமா பின்புலம் இல்லாமல் கிராமத்தில் இருந்து வாய்ப்பு தேடி சினிமாவிற்கு வந்தவர்தான் நடிகர் வடிவேலு. கவுண்டமணி செந்தில் மாதிரியான பெரும் காமெடி நடிகர்கள் பிரபலமாக இருந்த காலகட்டத்திலேயே தனக்கென தனி நகைச்சுவை பாணியை கொண்டு தமிழ் சினிமாவில் இடம் பிடித்தவர் வடிவேலு.

அவர் சினிமாவிற்கு வந்த போது அவரை நடிகர் கவுண்டமணி ஒரு முறை அடித்து எதற்கு நடிக்க வந்தாய் என்றெல்லாம் மிரட்டியதாக கூறப்படுகிறது. இப்படி எல்லாம் இருந்தும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற வடிவேலு கடந்த சில வருடங்களாக தொடர்ந்து விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறார்.

vadivelu
vadivelu

வடிவேலுவுடன் சேர்ந்து நடித்த பலரும் அவரைக் குறித்து பேட்டியளிக்கும் பொழுது அதில் வடிவேலு தங்களுக்கு எந்த உதவியும் செய்வதில்லை தங்களை கைவிட்டு விட்டார் என்று கூறி இருக்கின்றனர். அதற்கு தகுந்தார் போல காமெடி நடிகர்களின் இறப்பிற்கு கூட செல்லாமல் இருக்கிறார் வடிவேலு.

தற்சமயம் விஜயகாந்தின் இறப்பிற்கும் வடிவேலு வராதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் உதவி இயக்குனரும் காமெடி நடிகருமான சௌந்தர் வடிவேலு குறித்து பேசும் பொழுது அவரைப் பற்றி நல்லவிதமாக பேசியிருக்கிறார்.

பொதுவாகவே வடிவேலு குறித்து நடிகர்கள் நல்லவிதமாக பேசுவது என்பது அரிதான விஷயமாகிவிட்டது. இது குறித்து சௌந்தர் கூறும் பொழுது வடிவேலு என்னுடன் நல்ல நட்பில் இருந்தார். எந்த ஒரு திரைப்படத்திலும் நான் நன்றாக நடிக்கும் போது அதை கைதட்டி அவரே வரவேற்பார்.

வெற்றி கொடி கட்டு திரைப்படத்தில் ஒரு கிளி ஜோசியகாரனாக நடிப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதில் நான் நடிக்க செல்லும் பொழுது என்னை வரவேற்ற வடிவேலு இயக்குனர் சேரனிடம் பேசி எனக்கு அந்த திரைப்படத்தில் டீக்கடைக்காரர் கதாபாத்திரத்தை வாங்கி கொடுத்தார் அந்த மாதிரி எனக்கு நன்மைகளைதான் செய்திருக்கிறார் வடிவேலு என்று கூறி இருக்கிறார் நடிகர் சௌந்தர்.

To Top