படம் முழுக்க பொண்ணுங்கதான்.. தம்பி ராமையா மகன் இயக்கும் ராஜாகிளி.. ட்ரைலரில் இதை கவனிச்சீங்களா?.
வெகு காலங்களாக தமிழ் சினிமாவில் பல துறைகளிலும் பணியாற்றி வந்தவராக தம்பி ராமையா இருந்து வருகிறார். தம்பி ராமையா இயக்குனர் ஆக வேண்டும் என்று தான் தமிழ் சினிமாவிற்கு வந்தார். ஆனால் அவருக்கு இயக்குனர் ஆவதற்கு அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
அவர் இயக்கிய படங்களும் பெரிதாக வரவேற்பு பெறவில்லை அதற்கு பிறகு தம்பி ராமையா தொடர்ந்து நிறைய படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். அதன் மூலமாக அவர் பிரபலமடைய துவங்கினார்.
சொல்லப்போனால் திரைப்படங்களை இயக்குவதை விடவும் நடிப்பது தம்பி ராமையாவிற்கு நன்றாகவே வந்தது. இந்த நிலையில் தற்சமயம் தம்பி ராமையா மற்றும் அவரது மகன் உமாபதி ராமையா இருவரும் இணைந்து உருவாக்கி இருக்கும் திரைப்படம் ராஜா கிளி.

சமுத்திரக்கனி படம்:
இந்த திரைப்படத்தில் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சுரேஷ் காமாட்சி இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்கிறார். இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகியது படத்தின் கதைப்படி மிகப்பெரும் கோடீஸ்வரனாக இருக்கும் தம்பி ராமையா தொடர்ந்து பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் வீக்கான ஆளாக இருக்கிறார்.
அதனால் நிறைய பெண்களை அவர் திருமணம் செய்கிறார் பிறகு அது அவர் வாழ்க்கையில் எப்படி மோசமாக மாற்றுகிறது என்பதாக படத்தின் கதை இருக்கிறது. படத்தின் டிரைலரில் துவக்கத்தில் பெரும் கோடீஸ்வரராக இருக்கும் தம்பி ராமையா படத்தின் முடிவில் பிச்சைக்காரனாக மாறுகிறார் இந்த படத்திற்கு பெரிதாக வரவேற்புகள் எதுவும் கிடைக்கவில்லை ஆனால் நிறைய கவர்ச்சி காட்சிகள் இந்த படத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது