News
அஜித் அண்ணனை அடிச்சிப்புட்ட!.. கொஞ்ச நாளைக்கு ஊருக்குள்ள இருக்காத… வைபவை நாடு கடத்திய வெங்கட் பிரபு!..
Actor Ajith: நடிகர் விஜய்க்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகமாக வசூலை குவிக்கும் கதாநாயகனாக நடிகர் அஜித் இருக்கிறார். அஜித் நடிக்கும் திரைப்படங்களுக்கு மார்கெட் குறையாமல் இருப்பதால் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருகிறார்.
ஆனால் தற்சமயம் அஜித்திற்கு அவ்வளவாக திரைப்படம் நடிப்பதில் நாட்டம் இல்லை என தெரிகிறது. ஏனெனில் கிடைக்கிற இடைவெளிகளில் எல்லாம் உலகை சுற்றி வருவதற்காக பயணம் மேற்கொள்வதில்தான் அஜித் ஈடுபாடு காட்டி வருகிறார்.
இதனால்தான் துணிவு திரைப்படத்திற்கு பிறகு பெரும் இடைவெளி ஒன்று உருவானது. இந்த நிலையில் எப்படியோ ஒரு வழியாக தற்சமயம் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார் அஜித். அதே சமயம் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கோட் திரைப்படம் உருவாகி வருகிறது.

ஏற்கனவே வெங்கட் பிரபு அஜித்தை வைத்து மங்காத்தா திரைப்படத்தை இயக்கியிருந்தார். மங்காத்தா திரைப்படத்தின் கதையை கேட்டப்போதே அதில் அர்ஜுனின் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என ஆசையாக இருந்தது. ஆனால் வெங்கட் பிரபு கேட்காததால் நான் நடிக்கவில்லை என விஜய் ஒருமுறை கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஒரு வழியாக விஜய்யை வைத்து திரைப்படம் இயக்கி வருகிறார் வெங்கட்பிரபு. இந்த படத்தில் நடிகர் வைபவ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒருமுறை பேட்டியில் வைபவ் கூறும்போது மங்காத்தா திரைப்படத்தில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்றை கூறியிருந்தார்.
மங்காத்தா திரைப்படத்தில் ஒரு காட்சியில் தனது மனைவியை தவறாக பேசியதற்காக வைபவ் அஜித்தை அடிப்பது போன்ற காட்சி இருந்தது. அந்த காட்சியில் அஜித்தை அடிக்க முடியாது என கூறியுள்ளார் வைபவ். நடிப்புக்காகதானே அடிக்க போகிறாய் நிஜமாகவா அடிக்க போகிறாய் என அஜித் ஆறுதல் கூறிய பிறகு அந்த காட்சியில் அஜித்தை அடித்து நடித்தார் வைபவ்.
ஆனால் படம் வெளியாகும் நேரத்தில் வைபவை அழைத்த வெங்கட் பிரபு எதற்கும் படம் வெளியாகும்போது ஊருக்குள் இருக்காதே என கூறியுள்ளார் வெங்கட்பிரபு. இந்த நிகழ்வை தனது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் வைபவ்.
