இதெல்லாம் இல்லாமல் ஒரு மனுசன் உருவாகவே முடியாது!.. மகளின் இறப்பு குறித்து பேசிய விஜய் ஆண்டனி!..

தமிழ் சினிமாவில் சவுண்ட் எஞ்சினியராக வேலைக்கு வந்து பிறகு ஒரு நடிகராக பெரும் உயரத்தை தொட்டவர் நடிகர் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனிக்கு ஆரம்பத்தில் இருந்தே நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்தது.

ஆனால் வந்த உடனேயே ஒருவர் சினிமாவில் பெரிய உயரத்தை தொட முடியாது என்பதால் அவர் தொடர்ந்து சினிமாவில் சவுண்ட் இஞ்சினியர் பணிக்கு வந்தார். அதன் மூலமாக அவருக்குத் திரைப்படங்களில் இசையமைப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன.

இந்த நிலையில் நான் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார் விஜய் ஆண்டனி. அந்த திரைப்படம் அவருக்கு அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து நல்ல நடிகராக தனது திரைப்பயணத்தை தொடர்ந்து வருகிறார் விஜய் ஆண்டனி.

Social Media Bar

சமீபத்தில் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அவரை அதிகமாக பாதித்தது. ஆனால் சில நாட்களிலேயே அதிலிருந்து மீண்டு வந்துவிட்டார் விஜய் ஆண்டனி. வழக்கம் போல அவர் தனது திரைப்பட வேலைகளில் ஈடுப்பட்டு வருகிறார்.

இதனால் அவரை நெட்டிசன்கள் பலரும் மகள் இறந்ததை கூட மறந்துவிட்டு ஜாலியாக இருக்கிறாரே என்றெல்லாம் பேசினர். இந்த நிலையில் ஒரு பேட்டியில் பேசிய விஜய் ஆண்டனி கூறும்போது வலி இல்லாமல் ஒரு பெர்சனாலிட்டி உருவாகவே முடியாது.

வலி போன்ற விஷயங்களை அதிகமாக கடந்தவன் தான் வாழ்க்கையில் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்கிறான். அது நம் வாழ்க்கையின் ஒரு பகுதி என கூறலாம். அறுசுவையில் ஒரு சுவையாக கசப்பு இருப்பது போல நம் வாழ்வில் வலி இருக்கும் என்கிறார் விஜய் ஆண்டனி.