Connect with us

அப்பாவை வீட்டிற்கு வெளியேவே நிற்க வைத்த விஜய்!.. ரொம்ப கோபக்காரர்தான் தளபதி!..

vijay sa chandrasekar

News

அப்பாவை வீட்டிற்கு வெளியேவே நிற்க வைத்த விஜய்!.. ரொம்ப கோபக்காரர்தான் தளபதி!..

Social Media Bar

தற்சமயம் லியோ படத்தின் டிரைலர் மூலமாக அதிகமாக பேசுபொருளாக ஆகியுள்ளார் நடிகர் விஜய். இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு உண்டு. லியோ திரைப்படத்திற்குமே கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

ஆனாலும் படத்தின் டிரைலர் நேர்மறையான விமர்சனங்களையும் பெறுகிறது, அதே சமயம் எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்றுள்ளது இருந்தாலும் லோகேஷ் கனகராஜ் திரைப்படம் என்பதால் இந்த திரைப்படம் அதிக வசூலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படத்தில் இரண்டு விஜய் கதாபாத்திரங்கள் இருப்பதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் அரசியலுக்கு வந்தது முதலே அவர் அதிகமாக தாக்கப்பட்டது அவரது குடும்ப விஷயம் காரணமாகத்தான்.

அவருக்கும் அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகருக்கும் இடையே நிலவிய பிரச்சனை காரணமாக அவர்கள் சிறிது காலம் பிரிந்து இருந்தனர். இந்த விஷயம் சமூக வலைதளங்களில் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தியது. குடும்பத்தில் தனது பெற்றோரையே சரியாக பார்த்துக் கொள்ளாத விஜய் எப்படி மக்களை நன்றாக பார்த்துக் கொள்வார் என்றெல்லாம் பேச துவங்கி விட்டனர்.

இந்த நிலையில் இது குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் கூறும் போது ஒரு முறை தனது பேரனை பார்ப்பதற்காக விஜய் வீட்டிற்கு எஸ்.ஏ சந்திரசேகரும் விஜய்யின் அம்மாவும் வந்திருக்கிறார்கள் அப்போது வெளியே நின்ற வாட்ச்மேன் விஜய்யிடம் போய் கேட்டுவிட்டு விஜய்யின் அம்மாவை மட்டும் உள்ளே வர அனுமதித்துள்ளார்.

இதனால் கோபம் அடைந்த அவரது தாய் தனது கணவனுடன் திரும்ப வீட்டிற்கு சென்று விட்டார். அந்த அளவிற்கு சண்டை இருந்தது இந்த நிலையில் தற்சமயம் விஜய் தனது அம்மா அப்பா உடன் சேர்ந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு இந்த சர்ச்சைகளுக்கு முடிவு கட்டியுள்ளார் என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

To Top