Connect with us

Actor Vijay :வெளியூர் போயிட்டு வர்றதுக்குள்ள வாய்ப்பு கைமாறிட்டே!.. பிரபுதேவாவிற்கு பதிலாக விஜய்யை வைத்து எடுத்த படம்…

prabhu deva vijay

Cinema History

Actor Vijay :வெளியூர் போயிட்டு வர்றதுக்குள்ள வாய்ப்பு கைமாறிட்டே!.. பிரபுதேவாவிற்கு பதிலாக விஜய்யை வைத்து எடுத்த படம்…

Social Media Bar

Actor Vijay: நடிகர் விஜய் தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருந்து வருகிறார். ஆனால் பலமுறை தமிழ் சினிமாவில் பெரும் தோல்விகளை சந்தித்துள்ளார் விஜய். ஏனெனில் மற்றைய சினிமாக்களில் ஹீரோவிற்காகவே அந்த படம் நன்றாக இல்லை என்றாலும் மக்கள் பார்ப்பார்கள்.

ஆனால் தமிழ் சினிமாவில் நல்ல ஹீரோவின் படமாக இருந்தாலும் கதை பிடிக்காத பட்சத்தில் பார்க்க மாட்டார்கள். தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து வாலி திரைப்படம் மூலமாக இயக்குனரானவர் எஸ்.ஜே சூர்யா.

இயக்குனர் வசந்திடம் உதவி இயக்குனராக இருந்த இவர் ஆசை திரைப்படத்தின்போது அஜித்திடம் பழக்கமானார். இந்த நிலையில் அஜித்திடம் பேசி அவரை வைத்து இவர் எடுத்த வாலி திரைப்படம் பெறும் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்து ஒரு காதல் கதையை எழுதியிருந்தார்.

prabhu-deva
prabhu-deva

இந்த காதல் கதை முழுக்க முழுக்க கல்லூரி தொடர்பான கதையாக இருந்ததால் அதில் பிரபுதேவாவை நடிக்க வைக்கலாம் என திட்டமிட்டப்பட்டிருந்தது. பிரபுதேவா கொஞ்சம் வேலையாக இருந்ததால் வெளிநாட்டுக்கு சென்று வரவேண்டி இருந்தது. எனவே நான் வெளிநாட்டிற்கு சென்று வருகிறேன்.

பிறகு படத்தை பற்றி பேசிக்கொள்ளலாம் என கூறிய பிரபுதேவா வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் வரிசையாக தோல்வி படங்களில் நடித்து அதனால் அதிருப்தியில் இருந்தார் நடிகர் விஜய். இந்த நிலையில் எஸ்.ஜே சூர்யா ஒரு நல்ல கதையோடு படம் எடுக்க காத்திருக்கிறார் என்கிற விஷயம் எப்படியோ விஜய் காதுக்கு வந்தது.

ஏற்கனவே வாலி திரைப்படத்தில் பெரும் வெற்றியை கொடுத்ததால் எஸ்.ஜே சூர்யாவிற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்த நிலையில் அவரை அழைத்து பேசிய விஜய் அந்த படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். இப்படியாக குஷி திரைப்படம் தயாரானது. ஆனால் முதலில் இந்த படத்தில் நடிக்கவிருந்தவர் பிரபு தேவாதான்.

To Top