Connect with us

திரைப்பட விழாவில் பாதிப்படம்தான் வெளியிட்டோம்… விடுதலை 2 இன்னும் பாதி இருக்கு!. படத்தின் கதை குறித்து விஜய்சேதுபதி கொடுத்த அப்டேட்!.

viduthalai 2

News

திரைப்பட விழாவில் பாதிப்படம்தான் வெளியிட்டோம்… விடுதலை 2 இன்னும் பாதி இருக்கு!. படத்தின் கதை குறித்து விஜய்சேதுபதி கொடுத்த அப்டேட்!.

Social Media Bar

Vijay sethupathi: தமிழ் சினிமாவில் ஓரளவு நல்ல கதை களங்களை தேர்ந்தெடுத்து படம் நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் சேதுபதி.

பொதுவாக கதாநாயகனாக நடித்து பெரும் வரவேற்பை பெற்ற நடிகர்கள் வில்லனாக நடிப்பதற்கு மிகவும் யோசிப்பார்கள். ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்தார் விஜய் சேதுபதி. அதனை தொடர்ந்து அவருக்கான வரவேற்பு என்பது அதிகரித்தது.

விஜய் சேதுபதி வில்லனாக நடித்தாலும் கதாநாயகனாக நடித்தாலும் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றனர். 10 நிமிடம் திரையில் வந்தாலும் அது மாஸாக இருக்க வேண்டும் என்பதுதான் விஜய் சேதுபதியின் பாலிஸியாக உள்ளது.

vijay_sethupathi
vijay_sethupathi

அதனை தொடர்ந்து விக்ரம் ஜவான் என்ற பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. அதே சமயம் கதாநாயகனாகவும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சூரி கதாநாயகனாக நடித்த விடுதலை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்தார்.

விஜய் சேதுபதி கொடுத்த அப்டேட்:

இந்த திரைப்படத்தை வெற்றிமாறன் தயாரித்து இருந்தார். காவல்துறையின் அதிகார மீறலை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. விடுதலை திரைப்படத்தின் முதலாம் பாகம் முடிந்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புகள் சென்று கொண்டிருந்தன.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது என்று பலரும் நினைத்திருந்தனர். ஏனெனில் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் விடுதலைப் படத்தின் இரண்டாம் பாகம் திரையிடப்பட்டுள்ளது.  இந்த நிலையில் விஜய் சேதுபதி இது குறித்து புது அப்டேட் கொடுத்து இருக்கிறார்.

viduthalai
viduthalai

அந்த படத்தில் புதிதாக வாத்தியாரின் இளமைக் கால கதைகளை இணைப்பதற்கு இருக்கிறோம். அதற்கான படப்பிடிப்புகள் தற்சமயம் சென்று கொண்டிருக்கின்றன. அது இல்லாமல் விடுதலை முதல் பாகத்தின் தொடர்ச்சியாக நடக்கும் நிகழ்வுகள் மட்டுமே ஏற்கனவே படமாக்கப்பட்டு விட்டன அவை தான் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளன.

வாத்தியாரின் கதையும் எடுக்கப்பட்ட பிறகு விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் முழுமையாக திரைக்கு வரும் என்று கூறியிருக்கிறார் விஜய் சேதுபதி. மேலும் இரண்டாம் பாகத்தில் கௌதம் மேனன் திருந்தி நல்ல போலீஸாக மாறுகிறார் என்பது விஜய் சேதுபதி கொடுத்த அப்டேட்டின் வழியாக தெரிகிறது.

To Top