Connect with us

ஷாருக்கான் மாதிரி கோர்ட் போட்டுட்டு வந்தாதான் ஆடம்பரமா!.. பாலிவுட்டுக்கு சென்று கலாய்த்து விட்டு வந்த விஜய்சேதுபதி!..

vijay sethupathi sharukhkhan

News

ஷாருக்கான் மாதிரி கோர்ட் போட்டுட்டு வந்தாதான் ஆடம்பரமா!.. பாலிவுட்டுக்கு சென்று கலாய்த்து விட்டு வந்த விஜய்சேதுபதி!..

Social Media Bar

Vijay sethupathi sharukh khan : தமிழில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் சேதுபதி. பொதுவாக நடிகர்கள் ஹீரோ அல்லாமல் மற்ற கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு யோசிப்பார்கள். ஏனெனில் அப்படி நடித்து விட்டால் தொடர்ந்து கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்குமா? என்பது அவர்களுக்கு கேள்விக்குறியான விஷயமாக இருக்கும்.

ஆனால் விஜய் சேதுபதியை பொருத்தவரை அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க கூடியவர். சில திரைப்படங்களில் இவர் சிறப்பு கதாபாத்திரத்தில் கூட வந்திருக்கிறார். உதாரணமாக ஓ மை கடவுளே மாதிரியான திரைப்படங்களில் சிறப்பு தோற்றங்களில் விஜய் சேதுபதி வந்து நடித்திருப்பார்.

அதேபோல நிறைய திரைப்படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். தற்சமயம் பாலிவுட்டில் வெளியான ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் வில்லனாக நடித்திருந்தார். இப்படி எல்லாம் வில்லனாக நடித்தாலும் கூட விஜய் சேதுபதிக்கு கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்பு என்பது வந்து கொண்டுதான் இருக்கின்றது.

தற்சமயம் இவர் பாலிவுட்டில் மேரி கிறிஸ்மஸ் என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை கேத்தரினா கைஃப் நடித்திருந்தார். வெகு சீக்கிரமாகவே பாலிவுடிற்க்கு சென்று விட்ட ஒரு நடிகராக விஜய் சேதுபதி இருக்கிறார்.

இந்த நிலையில் பாலிவுட்டில் அவர் ஒரு பேட்டியில் இருந்த பொழுது எப்படி எப்போதுமே சிம்பிளாக உடை அணிந்து இருக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டனர். அதற்கு பதில் அளித்த விஜய் சேதுபதி நான்  எளிமையாக எல்லாம் உடை அணியவில்லை. நான் அணிந்திருக்கும் உடை விலை மதிப்புடைய உடை தான்.

ஆனால் எனக்கு ஆடம்பரமான பெரிய உடைகளை போடுவது அவ்வளவு வசதியாக இல்லை அதனால் தான் எனக்கு பிடித்த மாதிரியான உடைகளை போட்டுக்கொள்கிறேன் மற்றபடி கோர்ட் மாதிரியான உடைகளை அணிந்து வந்தால் தான் ஆடம்பரம் என்றெல்லாம் கிடையாது என்று கூறியிருந்தார். பெரும்பாலும் ஷாருக்கானில் துவங்கி பாலிவுட் நடிகர்கள் பலரும் கோர்ட் அணிந்து கொண்டுதான் பேட்டிகளுக்கும் விருது வழங்கும் விழாக்களுக்கும் வருவார்கள் அதை கேலி செய்யும் வகையில் இருந்தது விஜய் சேதுபதியின் அந்த பேச்சு.

Articles

parle g
madampatty rangaraj
To Top