Connect with us

கமல்ஹாசன் வாய் வார்த்தையாதான் சொன்னாரு!.. விஜயகாந்த் நேர்ல போய் நின்னாரு!.. அவர்கிட்ட கத்துக்கணும்..

kamalhaasan vijayakanth

News

கமல்ஹாசன் வாய் வார்த்தையாதான் சொன்னாரு!.. விஜயகாந்த் நேர்ல போய் நின்னாரு!.. அவர்கிட்ட கத்துக்கணும்..

Social Media Bar

Vijayakanth and Kamalhaasan : தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு பிறகு வாரி வழங்கும் வள்ளலாக மக்களால் பார்க்கப்படும் ஒருவராக நடிகர் விஜயகாந்த் இருக்கிறார். சாதாரண குடும்பத்தில் பிறந்த விஜயகாந்த் கனவுகளுடன் சென்னைக்கு கிளம்பி வந்தார்.

சென்னையில் வந்து பல கஷ்டங்களைப் அனுபவித்து சினிமாவில் வாய்ப்பை பெற்றார். சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக பணிபுரிந்த கால கட்டங்களில் உணவுக்கு மிகவும் கஷ்டப்பட்டார் விஜயகாந்த். அப்பொழுது முதல் ஒரு முடிவை எடுத்தார்.

தான் ஒரு பெரிய நடிகரான பிறகு அனைத்து ஊழியர்களுக்கும் நல்ல உணவை வழங்க வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது. அதன் பிறகு திரையில் பெரும் உயரத்தை தொட்ட பிறகு தொடர்ந்து அனைவருக்கும் நன்மைகளை செய்து வந்தவர் விஜயகாந்த். இவரை குறித்து சத்யராஜ் ஒருமுறை கூறும் பொழுது கும்பகோணம் சத்துணவு கூடத்தில் விபத்து ஏற்பட்ட பொழுது விஜயகாந்த் மற்றும் சத்யராஜ் இருவரும் ஒரே  படப்பிடிப்பு தளத்தில் தான் இருந்தனர்.

vijayakanth1
vijayakanth1

ஆனால் விஷயத்தை கேள்விப்பட்டதும் அன்று இரவே விஜயகாந்த் கும்பகோணம் சென்று விஷயத்தை விசாரித்துவிட்டு பத்து லட்ச ரூபாய் நிதியும் வழங்கிவிட்டு மறுநாள் காலை மீண்டும் படப்பிடிப்பிற்கு வந்துவிட்டார். செய்தியில் பார்த்துதான் இந்த விஷயம் சத்யராஜுக்கு தெரிந்தது.

உடனே விஜயகாந்த்திடம் சென்று எப்போது சென்றீர்கள் எனது விவரங்களை விசாரித்துவிட்டு பிறகு விஜயகாந்த் நிதி கொடுத்த காரணத்தினால் மற்ற நடிகர்களும் வேறு வழி இன்றி நிதி கொடுத்திருக்கின்றனர். அப்போதைய சமயத்தில் நிதி வழங்குவதாக கமல்ஹாசன் அறிவித்தார் ஆனால் அவர் இப்போது வரை நிதி வழங்கவே இல்லை என்று இது குறித்து கூறியிருக்கிறார் மீசை ராஜேந்திரன். எனவே உதவி செய்வதை பொருத்தவரை விஜயகாந்தை பார்த்து எப்படி உடனடியாக உதவி செய்வது என கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் மீசை ராஜேந்திரன்.

To Top