Connect with us

விஜய் மகன் இயக்கத்தில் ஷங்கர் மகன் நடிக்க போறாரா?.. என்னப்பா சொல்றீங்க…

vijay son

News

விஜய் மகன் இயக்கத்தில் ஷங்கர் மகன் நடிக்க போறாரா?.. என்னப்பா சொல்றீங்க…

Social Media Bar

பிரபல நடிகர்களின் வாரிசுகள் சினிமாவில் நடிப்பது வழக்கமான ஒன்றுதான். அவர்களின் வாரிசுகளையும், தங்களைப் போல அறிமுகம் செய்து சினிமாவில் அவர்களுக்கென்று தனி இடங்களை உருவாக்கிக் கொடுப்பார்கள். அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் பல நடிகை, நடிகர்கள் இவ்வாறு சினிமா பின்னணியை கொண்டுதான் நடித்து வருகிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது பிரபலம் ஒருவரின் மகன் இயக்குனராக அறிமுகமாகள அந்த படத்தில் மற்றொரு பிரபலத்தின் மகன் நடிக்கப் போவதாக தகவல் வெளிவந்துள்ளது.

பிரம்மாண்ட இயக்குனரின் மகன்

பிரம்மாண்ட இயக்குனர் என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருபவர் சங்கர். இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் தற்பொழுது நடந்து முடிந்த நிலையில், அவரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர் படத்தில் நடிகையாக நடித்து வருகிறார். நடிகை அதிதி விருமன் படத்தில் அறிமுக நடிகையாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

தற்பொழுது அவர் அதர்வாவின் தம்பி, ஆகாஷ் முரளி ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் பல படங்களில் ஒப்பந்தமாகி இருக்கும் அதிதி சங்கர் தற்பொழுது பிஸியாக இருந்து வருகிறார்.

vijay son

இந்நிலையில் சங்கரின் மகனான அர்ஜித் சங்கர் சினிமாவில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. ஏனெனில் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அனிரூத்துடன் சம ஆட்டம் போட்டார் சங்கரின் மகன். எனவே சங்கர் அவரின் மகனை சினிமாவில் நடிக்க வைப்பார் என பேசப்பட்டு வந்த நிலையில், கட்டாயம் அவரின் தயாரிப்பில் நடிக்க வைக்க மாட்டார் என பலரும் கூறுகிறார்கள்.

பிரபல நடிகரின் மகன் இயக்குனராக களம் இறங்குகிறார்

இந்நிலையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் லைக்கா தயாரிப்பில் இயக்குனராக அறிமுகமாக உள்ள நிலையில், அவருடைய படத்தில் ஹீரோவாக அர்ஜித் ஷங்கர் நடித்தால் எவ்வாறு இருக்கும் என்ற கேள்வியை அனைவரும் முன்வைத்து வருகிறார்கள். மேலும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், இயக்குனர் சங்கரின் மகன் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top