Latest News
தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடைசி வார்னிங் கொடுத்த நடிகர் விஷால்.. இவ்வளவு டெரர் ஆயிட்டாரே!.
vishal: தமிழ் சினிமாவில் தற்போது பல சர்ச்சைகளை சிக்கி வருபவர் நடிகர் விஷால். பட ப்ரோமோஷனல் கலந்து கொள்ளும் அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பல கருத்துக்களை கூறுவதன் மூலம் சர்ச்சையில் சிக்கிக்கொள்கிறார். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு அனுப்பி உள்ள நோட்டீஸ் குறித்து நடிகர் விஷால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்கம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஷால், தனுஷ், சிம்பு ஆகியோருக்கு ரெட் கார்ட் கொடுத்திருந்தது. இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்திற்கு நடிகர் விஷால் வார்னிங் கொடுத்துள்ளார். அது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ரெட் கார்ட் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்
தற்போது தயாரிப்பாளர்கள் அனைவரும் படத்தின் ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொள்ளும் நடிகர், நடிகைகளை குற்றம் குற்றம் சாட்டி வருகிறார்கள். இதில் நடிகை நடிகர்கள் யாரும் படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொள்வதில்லை. தயாரிப்பாளர்களின் நலனில்அக்கறை செலுத்துவதில் இல்லை என பல குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் நிலையில், தற்போது தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடிகர் தனுஷ், விஷால், சிம்பு உள்ளிட்டோருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.
மேலும் நடிகர் தனுஷ் படம் எடுத்தால் தயாரிப்பாளர் சங்கத்திடம் அனுமதி பெற்ற பிறகு தான் படத்தில் நடிக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நடிகர் விஷால் மீது குற்றச்சாட்டு
மேலும் நடிகர் சங்கத்தின் பணத்தை எடுத்து விஷால் செலவு செய்து விட்டதாகவும், அதை சரி செய்ய வேண்டியது அவரின் கடமை என்றும், சங்கத்தின் பணத்தை எடுத்து யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாமா? எதற்கு பொதுக்குழு என்று ஒன்று உள்ளது? அதற்கான உரிய விளக்கம் அவர் கொடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பதிலடி கொடுத்த நடிகர் விஷால்
இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட விஷால் சமீபத்தில் என் பெயரை குறிப்பிட்டு பல அவதூறுகளை சுமத்தி சுமத்தி வருகிறது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் ஸ்பெஷல் ஆடிட்டர் அறிக்கை மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக என்னிடம் முறையாக எந்த ஒரு விளக்கமும் கேட்கப்படாத நிலையில், இப்படி ஒரு பொய்யான பத்திரிக்கை செய்தியை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் நடிகர் சங்க தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து சங்க உறுப்பினர்களின் நலனை கருத்தில் கொண்டு, பொறுப்பாளர் அதில் செயலாளராக இருந்த திரு கதிரேசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் தீர்மானங்களின்படி ஆயுள் கால காப்பீடு திட்டம், ஓய்வூதிய திட்டம், கல்வி உதவித்தொகை, திருமண திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.
எந்தவிதமான தவறும் செய்யாத பட்சத்தில் என் மீது தீர்மானம் நிறைவேற்றியது ஏற்புடையது அல்ல. மேலும் நல உதவிகள் அனைத்தும் உறுப்பினர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் முறை கேடு உள்ளதாக சந்தேகம் இருக்கும் பட்சத்தில் அது தொடர்பான விளக்கத்தையும், தெளிவையும் நீங்கள் ஏற்படுத்த வேண்டும். தாங்கள் நேரடி முடிவெடுத்து ஆதாரம் இல்லாமல் பழி சுமத்துவது காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகவே அறியப்படுகிறது.
மேலும் என்னை வைத்து படம் எடுக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஏன் தயாரிப்பாளர் சங்கத்தில் கலந்த ஆலோசிக்க வேண்டும். என் மீது தனிப்பட்ட ரீதியில் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிய சங்கத்தின் நிர்வாகிகள் இக்கடிதம் பெற்ற 24 மணி நேரத்திற்குள் என் மீது பழி சுமத்தி அனுப்பிய பத்திரிக்கை செய்தியை திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் நான் சட்டரீதியாக எதிர்கொள்வேன் என நடிகர் விஷால் தெரிவித்து இருக்கிறார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்