மீண்டும் விஜய் படத்தை கையில் எடுத்த கௌதம் மேனன்.. விரைவில் வெளிவர இருக்கும் அப்டேட்.!

விஜய்யை வைத்து திரைப்படம் எடுக்க நினைக்கும் நிறைய இயக்குனர்களுக்கு விஜய்யே வாய்ப்பு கொடுத்தும் கூட படம் பண்ணுவதற்கான வாய்ப்புகள் அமையாமல் போயுள்ளது.

இதை நிறைய இயக்குனர்கள் பேட்டிகளில் பகிர்ந்துக்கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. சிவகாசி திரைப்படத்திற்கு பிறகு விஜய் பேரரசுக்கு வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அப்போது பேரரசு வேறு படத்தை இயக்கி வந்ததால் அந்த படத்தை அவரால் இயக்க முடியவில்லை.

அதே போல இயக்குனர் பி.வாசுவிடம் நடிகன் படத்தின் அடுத்த பாகத்தை எடுக்குமாறு கூறியுள்ளார். மேலும் அதில் நான் கதாநாயகனாக நடிக்கிறேன் என விஜய் கூறியுள்ளார். ஆனால் அப்போது இயக்குனர் பி.வாசு வேறு வேலைகளில் இருந்ததால் அவரால் இயக்க முடியாமல் போனது.

Social Media Bar

இதே சம்பவம் இயக்குனர் கௌதம் மேனனுக்கும் நடந்தது. உலக பிரபலமான லார்கோ வின்ச் என்கிற காமிக்ஸை அடிப்படையாக கொண்டு கௌதம் மேனன் இயக்க நினைத்த திரைப்படக் யோகன் அத்தியாயம் ஒன்று. இந்த படத்தை இரண்டு பாகமாக எடுக்க திட்டமிட்டிருந்தார் கௌதம் மேனன்.

ஆனால் அப்போதைய சூழ்நிலையில் அந்த படம் பாதியிலேயே நின்று போனது. இந்த நிலையில் அந்த படத்தை மீண்டும் இயக்க திட்டமிட்டுள்ளார் கௌதம் மேனன். இந்த நிலையில் இப்போது விஜய் அரசியலுக்கு சென்றுவிட்டதால் அந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விஷால் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.