News
பகல்ல பசுமாடே தெரியமாட்டேங்குது!.. நைட்ல எப்புடி கண் தெரியுது!.. மிஸ்கினை கலாய்த்த நடிகர்!.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்க கூடிய இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மிஸ்கின். தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்களை இயக்கி வரும் மிஸ்கின் தற்சமயம் நிறைய திரைப்படங்களில் நடித்தும் வருகிறார்.
சமீபத்தில் மாவீரன் திரைப்படத்தில் கூட வில்லனாக நடித்திருந்தார். தற்சமயம் விஜய் சேதுபதியை வைத்து ட்ரெயின் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார் மிஸ்கின். ஒரு ட்ரெயினிலேயே மொத்த படமும் நடக்கும் கதையாக இது இருக்கும் என கூறப்படுகிறது. இதற்காக பெரிய ட்ரெயின் செட் போட்டு அதில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் மிஸ்கின்.
சமீபத்தில் ப்ரூஃப் என்கிற திரைப்படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. அதில் யூகி சேது மற்றும் மிஸ்கின் இருவருமே கலந்துக்கொண்டனர். அதில் பேசிய யூகி சேது மிஸ்கினை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது ட்ரெயின் படத்தில் நான் நடித்து வருகிறேன்.

அவர் அழகான விஷயங்களை தன்னுள் மறைத்து கொள்வார். அவர் சிரித்தால் நன்றாக இருக்கும். ஆனால் எந்த மீட்டிங்கிலும் சிரிக்கவே மாட்டார். அனைவரையும் முறைத்தப்படியே இருப்பார். அதே போல அவரது கண்கள் அழகாக இருக்கும். ஆனால் அதை கண்ணாடியை வைத்து அவர் மறைத்துவிடுவார்.
பகலில் கண்ணாடி போட்டாலே எம்.ஜி.ஆர் யார் சிவாஜி யார் என நமக்கு தெரியாது. ஆனால் மிஸ்கின் இரவு 12 மணிக்கு கூட கண்ணாடி அணிந்திருப்பார். அவரது கண்களை பார்த்தால் எனக்கு பொறாமயாக இருக்கிறது. இப்படி ஒரு கண்கள் எனக்கு இல்லையே என எனக்கு தோன்றுகிறது என்கிறார் யூகி சேது.
