Cinema History
என்ன காரியம் செஞ்சிட்டு வந்திருக்க!.. ரசிகருக்கு பளார் என அறைவிட்ட அஜித்… என்ன விஷயம் தெரியுமா?
Actor Ajith: தமிழில் தொடர்ந்து வெற்றி படங்கள் கொடுத்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். துணிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித் சினிமாவில் நடிப்பதிலேயே பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை என்றுதான் கூறப்படுகிறது.
ரசிகர்கள்தான் அஜித் விஜய் என்றெல்லாம் சண்டை போட்டு வருகின்றனர் அஜித்தை பொருத்தவரை அவர் போட்டி போட்டு எல்லாம் படம் நடிக்கவில்லை. அதை விடவும் உலகை சுற்றி வருவதில்தான் ஆர்வம் காட்டி வருகிறார் அஜித்.
துணிவு படத்திற்கு பிறகு சுற்றுலா என்று கிளம்பிய அஜித் சில மாதங்கள் கழித்துதான் இந்தியாவிற்கு வந்தார். அதன் பிறகு தற்சமயம் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித். அஜித்திற்கு ஒரு பெரிய ரசிகப்பட்டாளம் தமிழ்நாட்டில் உண்டு.

தனது ரசிகர்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்டவர் அஜித் என்று கூறப்பட்டாலும் பொதுவெளியில் பொதுவாக ரசிகர்கள் மத்தியில் அஜித் தோன்றுவதில்லை. உண்மையில் ரசிகர்களை பார்ப்பதற்காக இசை நிகழ்ச்சிகள் விருது வழங்கும் விழாக்களுக்கு கூட அஜித் வர மாட்டார் என்று கூறப்பட்டாலும் எங்காவது ஒரு இடத்தில் அஜித்தை அவரது ரசிகர்கள் பார்த்து விட்டு போட்டோ எடுக்க வேண்டும் என்று கேட்டால் உடனே அவர்களுக்கு நின்று போட்டோ எடுத்து கொடுத்துவிட்டு செல்பவராக அஜித் இருக்கிறார்.
இந்த நிலையில் படபிடிப்பு தளத்தில் அஜித் குறித்து நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை நடிகை ஆர்த்தி தனது பேட்டியில் கூறியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது ஒருமுறை ரசிகர் ஒருவர் தலையில் தல முடியை வெட்டிக்கொண்டு அஜித்திடம் வந்தார்.
அதை பார்த்ததுமே அஜித்துக்கு மிகுந்த கோபம் வந்துவிட்டது உடனே அந்த ரசிகரை கன்னத்திலேயே அறைந்து விட்டார் அஜித். மேலும் அங்கு இருந்த முடி திருத்துபவரை அழைத்து உடனடியாக அவனுக்கு மொட்டை அடித்து அவனுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
பிறகு அவனிடம் பேசிய அஜித் இப்படி எல்லாம் நீ முடி வெட்டி கொண்டால் உனது வீட்டில் இருப்பவர்களுக்கு அது பிடிக்குமா என்னிடம் அன்பை இப்படித்தான் காட்ட வேண்டும் என்று தேவையில்லை என்று அவனுக்கு உபதேசம் சொல்லி அனுப்பி இருக்கிறார் இந்த விஷயத்தை ஆர்த்தி அந்த பேட்டியில் பகிர்ந்து இருந்தார்.
