Connect with us

உன் தோழிகள் இருந்தால் அனுப்பி வை.. பாலியல் பிரச்சனையில் சிக்கிய நடிகர் ரியாஸ் கான்!.

riyaz khan

News

உன் தோழிகள் இருந்தால் அனுப்பி வை.. பாலியல் பிரச்சனையில் சிக்கிய நடிகர் ரியாஸ் கான்!.

Social Media Bar

சினிமா துறையில் நாளுக்கு நாள் நடிகைகளுக்கு ஏற்படும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் பற்றிய சர்ச்சைகள் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. பல நடிகைகள் தைரியமாக முன்வந்து பேட்டிகளில் கூறினாலும் இன்னும் இந்த பிரச்சனை குறைந்தபாடில்லை.

நம் அனைவரும் சினிமாவில் நடிக்கும் நடிகைகள், துணை நடிகைகளுக்கு தான் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். சாதாரண பெண்கள் மீதும் பல வன்முறைகள் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் முக்கியமாக சினிமா துறையில் நடிகைகளாக இல்லாமல், பின்னணியில் வேலை பார்க்கும் பல பெண்களுக்கும் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது.

மக்களுக்கு நடிகைகளை அடையாளம் தெரிவதால் அவர்களின் பிரச்சனை மட்டுமே சமூகத்தில் ஒழிக்கப்பட்டு வருகிறது. மேலும் சினிமா துறையில் பின்னணியில் வேலை பார்க்கும் பல பெண்களுக்கும் இவ்வாறான பாதிப்புகள் ஏற்படுகிறது.

இந்நிலையில் தமிழில் பல படங்களில் வில்லனாக நடித்த நடிகர் ரியாஸ் கான் மீது பிரபல மலையாள சினிமாவின் இளம் நடிகையான ரேவதி சம்பத் பாலியல் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். தற்போது இது கோலிவுட் வட்டாரத்தை அதிர செய்திருக்கிறது.

நடிகர் ரியாஸ் கான்

இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்திருக்கிறார். இவர் நடிகர் மட்டுமல்லாமல் பாடி பில்டரும் ஆவார். 1994 ஆம் ஆண்டு பாலச்சந்திர மேனன் இயக்கிய சுகம் சுககரம் என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார்.

கேரளாவில் பூர்வீகமாக கொண்ட ரியாஸ் கான் அவருடைய தந்தை பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இந்நிலையில் சென்னையில் வளர்ந்த ரியாஸ் கான் தன்னுடைய வாழ்க்கை முழுவதும் சென்னையிலேயே அமைத்துக் கொண்டார்.

கடந்த 1992 ஆம் ஆண்டு உமா ரியாஸை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஷாருக் ஹாசன் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

Riyaz Khan

தமிழில் பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் பத்ரி, பாபா, ரமணா, வின்னர், கஜினி போன்ற பல பிரபலமான படங்களில் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

ரியாஸ் கான் மீது பாலியல் புகார்

மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு பல அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினைகள் வருவதால் கேரள மாநில அரசு பிரபல வழக்கறிஞர் தலைமையில் ஒரு குழு ஒன்றிய அமைத்து அதன் மூலம் வழக்குகளை பதிவு செய்யலாம் என கூறியிருந்தது.

இந்நிலையில் பல நடிகைகளும் அந்த அறிக்கையில் தங்களுக்கு நேர்ந்த பல பாலியல் தொல்லைகளை பதிவு செய்து வந்தார்கள். இதில் பிரபல மலையாள சினிமாவின் இளம் நடிகையான ரேவதி சம்பத், நடிகர் சித்திக் மீது பாலில் புகார் தெரிவித்து, அவர் நடிகர் சங்க பதிவில் இருந்து ராஜினாமா செய்தார். இது மலையாள சினிமாவை பெரும் பரபரப்புக்கு உள்ளாகியது

இந்நிலையில் தான் இவர் தமிழில் பிரபல வில்லன் நடிகர் ரியாஸ் கான் மீது பாலியல் புகார் ஒன்றை தெரிவித்திருக்கிறார். ரியாஸ் கான் ஒருமுறை என்னை அணுகியதாகவும், அப்போது போனில் என்னிடம் தகாத முறையில் பேசினார் என்றும், மேலும் என்னுடன் உடலுறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் உனது தோழிகள் இருந்தாலும் என்னிடம் கூறு என ரியாஸ் கான் தன்னிடம் கேட்டதாக ரேவதி சம்பத் தற்போது புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார்.

இது கோலிவுட் சினிமாவை தற்போது பரபரப்புக்கு உள்ளாகி இருக்கிறது. ரியாஸ் கானின் மகன் ஷாருக் ஹாசனுக்கு தற்போது தான் திருமணம் நடந்து முடிந்த நிலையில் இவர் மீது இவ்வாறான குற்றச்சாட்டுகள் சுமத்திருப்பது பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கி உள்ளது.

Articles

parle g
madampatty rangaraj
To Top