ரஜினி உங்களுக்கு அண்ணன் என்றால் நாந்தான் அண்ணி!.. கெளதமி பதிலால் அதிர்ச்சியான ரஜினி!.. இப்படியும் நடந்துச்சா..
தமிழ் சினிமாவில் பொதுவாக பத்திரிகையாளர்கள்தான் நடிகர்கள் குறித்து அதிக சர்ச்சையை கிளப்புவார்கள். ஆனால் சில சமயங்களில் நடிகைகள் கூட அப்படியான வேலைகளை பார்த்து விடுவதுண்டு.
ரஜினிகாந்தை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் பெரிதாக சர்ச்சைக்கு உள்ளாகாமல் தப்பித்து வந்த ஒரு நடிகர் என்று கூறலாம். ஏனெனில் சூப்பர் ஸ்டார் என்னும் அந்தஸ்திலிருந்துமே கூட பெரிதாக பத்திரிகையாளர்களிடம் சிக்காமல் எந்த சர்ச்சையையும் ஏற்படுத்தாமல் இருந்து வந்தார் ரஜினிகாந்த்.
பிரபலமாக இருந்த காலகட்டங்களில் நிறைய நடிகைகளுடன் நடித்துள்ளார் ரஜினி. அதில் ஒரு ஒரு சமயத்தில் தொடர்ந்து நடிகை கௌதமியுடன் நிறைய திரைப்படங்களில் நடித்தார் ரஜினிகாந்த். அப்பொழுது ரஜினியின் ரசிகர்கள் ரஜினியை அண்ணன் என்றுதான் அழைப்பார்கள்.
அவர்கள் கௌதமியை அண்ணி என்று அழைக்க துவங்கி விட்டார்கள். இதனை அறிந்த கௌதமி ஒரு பேட்டியில் பேசும்பொழுது தமிழ்நாட்டில் நான் இப்பொழுது புதிய அண்ணியாக இருக்கிறேன் என்று கூறிவிட்டார். இதனால் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று சர்ச்சைகள் கிளம்ப துவங்கின.
இதனை அறிந்த ரஜினி மிகவும் கோபமடைந்தார். எனவே கௌதமி அப்படி பேசியது தவறு என அவரை அழைத்து அவரை கண்டித்துள்ளார் ரஜினிகாந்த்.
